Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 மார்ச் 18 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் 2021 ஆம் ஆண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்ததனூடாக, இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது. சில முக்கியமான பிரிவுகளில் ஒப்பற்ற வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்திருந்தது. சிறந்த 5 துறைசார் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதியுயர் வழமையான புதிய வியாபார வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்திருந்ததுடன், துறையின் சராசரியான 29% உடன் ஒப்பிடுகையில் 42% வளர்ச்சியை எய்தியிருந்தது. ஒட்டுமொத்த தொழிற்துறையில் இரண்டாவது மாபெரும் வழமையான புதிய வியாபார தயாரிப்பாளராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்ந்தது. மேலும், 2021 ஆம் ஆண்டில், நிறுவனம் Million Dollar Round Table (MDRT) இல் 300 தகைமையாளர்களை உருவாக்கியிருந்தது. இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறை வரலாற்றில் இதுவரையில் பதிவாகியிருந்த அதியுயர் எண்ணிக்கையாக இது அமைந்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களுக்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்திருந்த நிலையில், இந்த சிறந்த பெறுமதிகளை யூனியன் அஷ்யூரன்ஸ் எய்தியிருந்தமை விசேட அம்சமாகும்.
யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், நிறுவனத்தின் வினைத்திறன் தொடர்பில் அதிகளவு பெருமை வெளியிட்டிருந்தார். இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையை மாற்றியமைக்கும் தூரநோக்குடைய தந்திரோபாயத்திட்டத்தினூடாக இந்த வெற்றிகரமான பெறுபேறுகளை எய்த முடிந்திருந்ததாக குறிப்பிட்டார். “வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தந்திரோபாயம், சுறுசுறுப்பு மறறும் ஒப்பற்ற டிஜிட்டல் அனுபவம் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்கி, அதனூடாக இலங்கையின் கனவுகளுக்கு வலுவூட்டும் உறுதி மொழியை பேணியிருந்ததனூடாக எமது உறுதியான பெறுபேறுகளை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.” என்றார்.
நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கியிருந்த ஊழியர்கள், முகவர்கள், ஆலோசகரக்ள் மற்றும் இதர பிரதான பங்காளர்களுக்கும் கோம்ஸ் தமது நன்றிகளை தெரிவித்தார். “எம்மை உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்வதில் எம்மீது நம்பிக்கை கொண்டு எமக்கு பங்களிப்பு வழங்கியிருந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பதுடன், நிறுவனத்தின் சாதனைகள் மற்றும் மைல்கற்கள் போன்றன எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளன. பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்து, இலங்கையர்களின் வாழ்க்கைக்கு வலுவூட்டுவதற்கு உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.
2021 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சில முக்கியத்துவம் வாய்ந்த மைல்கற் சாதனைகளை பதிவு செய்திருந்தது. நிகர செலுத்தப்பட்ட கட்டுப்பணம் (GWP) ரூ. 15 பில்லியனை கடந்திருந்தது. இது முன்னைய ஆண்டின் பெறுமதியான ரூ. 13 பில்லியனுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பாகும். வழமையான புதிய வியாபார கட்டுப்பணங்கள் ரூ. 3.1 பில்லியன் முதல் ரூ. 4.4 பில்லியனாக அதிகரித்தது. ஆண்டில் முதலீட்டு வருமானம் ரூ. 5 பில்லியனை கடந்திருந்தது. மொத்த தேறிய வருமானம் ரூ. 17.4 பில்லியனிலிருந்து ரூ. 20.6 பில்லியனாக அதிகரித்திருந்ததுடன், செயற்பாட்டு நடவடிக்கைகளினூடாக தேறிய பணப்பாய்ச்சல் ரூ. 8.3 பில்லியனிலிருந்து ரூ. 9.3 பில்லியனாக அதிகரித்திருந்தது.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிதி அதிகாரி ஆஷா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இலாபகரத்தன்மையில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை நாம் பதிவு செய்திருந்தோம். வரிக்கு முந்திய இலாபம் 46% இனால் அதிகரித்து ரூ. 2.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2020 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 1.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 921 மில்லியனிலிருந்து ரூ. 2.1 பில்லியனாக அதிகரித்திருந்தது. GWP, தேறிய முதலீட்டு வருமானம், செலவுகளை முறையாக கட்டுப்படுத்தியிருந்தமை மற்றும் செயன்முறை முன்னேற்றங்கள் போன்றவற்றினூடாக இந்த அபார 123% வளர்ச்சியை எய்த முடிந்தது.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
43 minute ago
3 hours ago