Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் தனது டிஜிட்டல் அனுபவத்தில் மற்றுமொரு புதிய உள்ளடக்கமாக சுய சேவை app ஆன Clicklife ஐ அறிமுகம் செய்துள்ளது. காப்புறுதிதாரர்களின் அதிகளவு கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது. யூனியன் அஷ்யூரன்சினால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்புறுதித் தீர்வுகளின் ஒரு அங்கமாக Click Life மொபைல் app அமைந்துள்ளது. இந்த வசதியினூடாக, காப்புறுதிதாரர்களுக்கு தமது மீதிகள், நிலுவைகள், நஷ்டஈடு கோரல் நிலைகள் மற்றும் கடன் சமர்ப்பிப்புகள் தொடர்பில் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
Clicklife app இனால் வாடிக்கையாளர்களுக்கு எப்பகுதியிலிருந்தும், எந்த நேரத்திலும் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் இணைந்து கொண்டு காப்புறுதித் திட்டங்களை நிர்வகிப்பது, நஷ்டஈடுகளை மேற்கொள்வது மற்றும் சௌகரியமான வகையில் பாதுகாப்பாக தவணைக்கட்டண கொடுப்பனவுகளை மேற்கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள முடியும். Clicklife app ஒரு படி முன்னேறி, நுகர்வோருக்கு தமது காப்புறுதியின் மீதான கடன் சமர்ப்பிப்புகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது. இதனூடாக முன்னர் காணப்பட்ட காலம் விரயம் நிறைந்த கடதாசி மூலமான விண்ணப்பத் தேவைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
இந்த டிஜிட்டல் அம்சத்தின் அறிமுகம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம தொழில்நுட்ப அதிகாரி ருமேஷ் மோதரகே கருத்துத் தெரிவிக்கையில், “கொடுக்கல் வாங்கல்களை 100% வெளிப்படையானதாக திகழச் செய்வதற்காக பாரம்பரிய கட்டமைப்புகளில் புதுமையைப் புகுத்துகின்றோம். காப்புறுதிதாரர்களுக்கு தற்போது தமக்கு அவசியமான சகல தகவல்களையும் தம் விரல்நுனிகளிலேயே பெற்றுக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்களுக்கு இது வரை காலமும் தமது காப்புறுதிப் பத்திரத்துடன் தொடர்புடைய தகவல்களான தொடர்பாடல் தகவல் மாற்றம், நஷ்டஈடுகள் சமர்ப்பிப்பு, கடன் சமர்ப்பிப்பு மற்றும் மீதி அறிக்கைகள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்கு முகவர்கள் அல்லது அழைப்பு நிலையத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டியிருந்தது. ஆனாலும், தற்போது இந்த app அறிமுகத்துடன் இந்த சகல சேவைகளையும் வாடிக்கையாளர்கள் சுயமாக பெற்றுக் கொள்ளலாம்.” என்றார்.
இந்த app இல் காணப்படும் மற்றுமொரு விறுவிறுப்பான அம்சம் யாதெனில், health tracker ஒன்று அமைந்துள்ளமையாகும். இதனூடாக அடிக்கடி health tips வழங்கப்படும். இதனூடாக, பங்காளர் வலையமைப்பில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலமைந்த, வெகுமதிகளையும் வவுச்சர்களையும் விலைக்கழிவு கூப்பன்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லுசில் டயஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுக்கும் முன்னணி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்வதுடன், காப்புறுதியைப் பெற்றுக் கொள்ளும் செயன்முறையை இலகுவாக்கியுள்ளது. எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது, நெருக்கடியான நிலைமைகளை தவிர்த்துக் கொள்வது, கடதாசிப்பாவனை மற்றும் பாரம்பரிய கட்டமைப்புகளை குறைப்பது போன்றன எமது டிஜிட்டல் மயமாக்கத்தின் அங்கமாக அமைந்துள்ளன. வாடிக்கையாளர்களினால் சமர்ப்பிக்கப்படும் நஷ்டஈடு கோரல்கள் மற்றும் அவற்றை பின்தொடர்வது போன்றன அதிகளவு நேரத்தை எடுக்கும் செயற்பாடுகளாகும், இவற்றை நிவர்த்தி செய்ய அதிகளவு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டியுமுள்ளது. தற்போது Clicklife சுய சேவை app அறிமுகத்துடன், காலம் தாழ்த்தல்களை நீக்கி ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம். நுகர்வோருக்கு உடனுக்குடன் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளதுடன், இன்றைய காலகட்டத்தில் வேகமாக அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.” என்றார்.
காப்புறுதிதாரருக்கு தமது காப்புறுதித் திட்டத்தின் முழுமையான கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க உதவுவதாக இந்த app அமைந்துள்ளது. லோயல்டி திட்டம், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய dashboard மற்றும் ஒன்லைன் முகவர்களுடன் 24/7நேரமும் அணுகும் வசதி போன்றனவும் வழங்கப்படுகின்றன.
நவீன மொபைல் தொழில்நுட்பத்தில் இயங்கும் Clicklife App ஐ சகல Android மற்றும் iOS பாவனையாளர்களும் Google Play Store மற்றும் App Store இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும் முதல் 1000 பாவனையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago