Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 நவம்பர் 15 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடப்பு நிதியாண்டின் 2021 செப்டெம்பர் 30ஆம் திகதியுடனான 3ஆம் காலாண்டு நிறைவில், செலான் வங்கி வரிக்கு பிந்திய இலாபமாக 3.2 பில்லியன் ரூபாயை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 45 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. வங்கியின் தேறிய வட்டி வருமானம் 14.76 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 17,068 மில்லியனாக பதிவாகியிருந்தது. தொற்றுப் பரவலுடனான சவால்கள் நிறைந்த சூழலில் தொழிற்துறை மீண்டு வரும் நிலையில், வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.
கடன் வழங்கலில் 8.75 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, கடன்களும் முற்பணங்களும் ரூ. 394 பில்லியனில் இருந்து ரூ. 428 பில்லியனாக அதிகரித்துள்ளது. தவணைக் கட்டணங்கள், மீள இடம்பெறும் இறக்குமதி கடன்கள், அடைமானங்கள் மற்றும் குத்தகைகள் போன்றன இதில் முக்கிய பங்களிப்பை பதிவு செய்திருந்தன. மீள நிதியளிப்பு கடன்கள் மற்றும் ஏற்றுமதி கட்டணங்கள் போன்றவற்றால் பகுதியளவில் செலுத்தப்பட்டிருந்தது. மேலும், வங்கியின் சொத்துகள் இருப்பு ரூ. 26,047 மில்லியனால் அதிகரித்து ரூ. 583,755 மில்லியனாக பதிவாகியிருந்தது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், செலான் வங்கியின் வைப்புகள் இருப்பு ரூ. 440 பில்லியனிலிருந்து ரூ. 451 பில்லியனாக அதிகரித்திருந்தது. ஒட்டுமொத்த நடைமுறைக் கணக்கு சேமிப்புக் கணக்கு (CASA) மீதிகள் 7.45 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன், CASA விகிதம் 34.61 சதவீதமாக பதிவாகியிருந்தது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் செலான் வங்கியின் நிகர கட்டணங்கள் மற்றும் தரகு வருமானம் 24.89 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. உத்தரவாதங்கள் மற்றும் வர்த்தக நிதியளிப்பு செயற்பாடுகளினூடாக இந்த வளர்ச்சிக்கு அதிகரிப்பு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. நிதி ஆவணங்கள் மீதான சந்தைப் பெறுமதி அடையாளங்களில் இழப்பு மற்றும் திறைசேரி பத்திரங்கள் மற்றும் முறிகள் மீது தேறிய வருமதிகள் இழப்பு போன்ற சூழலிலும், நாணயப் பரிமாற்று வருமானம் நிதிச் சொத்துக்களின் மதிப்பிறக்கம் காரணமாக பெறப்பட்ட தேறிய வருமதிகள், அந்நியச் செலாவணி கொடுக்கல் வாங்கல்கள் மீதான தேறிய வருமதிகள் மற்றும் இதர தொழிற்பாட்டு வருமதிகள் போன்றன திரண்டு மூன்றாம் காலாண்டில் ரூ. 1,979 மில்லியன் தேறிய வருமானத்தை பதிவு செய்திருந்தன.
செலவுகளைக் கட்டுப்பாட்டினுள் பேணி, நெகிழ்ச்சியான மற்றும் வினைத்திறனான செயன்முறைகளை எய்தும் செயன்முறைக்காக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பின்பற்றுவது மற்றும் பொறிமுறை மீளக் கட்டமைப்பு போன்றவற்றில் வங்கி கவனம் செலுத்தியிருந்த நிலையில், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் மொத்த செலவுகள் 5.42 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 10,036 மில்லியனாக பதிவாகியிருந்தது. அதேவேளை வங்கியின் வட்டி வருமானம் மற்றும் வட்டி செலவீனங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்திருந்தன. இதனூடாக, குறைந்தளவு வட்டி வீதத்துடனான சூழல் பதிவாகியிருந்ததுடன், நடைமுறைக் கணக்கு சேமிப்புக் கணக்கு (CASA) மீதிகளினூடாக இந்தப் பெறுமதி 29.62 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது.
மொத்த நிலை 1 மூலதன விகிதமாக 10.56 சதவீதத்தையும், மொத்த மூலதன விகிதமாக 13.87 சதவீதத்தையும் செலான் வங்கி பதிவு செய்திருந்தது. 2021 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று மொத்த செயற்படா முற்பணங்கள் (தேறிய நிறுத்தி வைக்கப்பட்ட வட்டி) விகிதம் 6.42 சதவீதமாக பதிவாகியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
5 hours ago