Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
J.A. George / 2020 நவம்பர் 13 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் முழுமையாக செயல்படும் ICU வளாகத்தின் தொடக்க விழாவின் போது பெயர் பலகை அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றது.
படத்தில்இடமிருந்துவலம்
சுகாதார அமைச்சின் உதவியுடன், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவை (ICU) பரிசளித்துள்ளது. இந்த முயற்சி கோவிட்-19 தொற்றுநோய்களின் போது தேசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தற்போதைய உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.
ஏப்ரல் 2020 இல் கோவிட்-19 தொற்றுநோயுடன் தொடர்புடைய சிக்கலான சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக டயலொக் 2000 இலட்சம் ரூபாய் தொகையினை வழங்குவதாக உறுதியளித்திருந்தது.
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரின் உறுதிமொழிக்கு அமைய நீர்கொழும்பு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட ICU ஐ முதல் கட்டமாக இயக்க உதவியது. மேலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிவேக பி.சி.ஆர் பரிசோதனையையும் செயல்படுத்தி பரிசோதனை மற்றும் அறிக்கையிடல் நேரத்தை 8 மணித்தியாலத்திலிருந்து சுமார் 2.5 மணித்தியாலமாக வெகுவாகக் குறைத்தது.
ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் முழுமையாக செயல்படும் ICU வளாகம் நிறுவப்பட்டுள்ளதுடன் இது கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களை திறம்பட கையாள சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு மருத்துவமனையின் திறனை மேம்படுத்துவதற்கான அதிநவீன ICU உபகரணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த முயற்சி கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ ஊழியர்களின் அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், மேலும் தீவிர சிகிச்சையில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பதையும் அதே நேரத்தில் மாவட்டத்தில் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஊக்கியாகவும் செயல்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தின் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியாராச்சி, "சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய டயலொக் ஆசிஆட்டா, உணர்ந்து சேவை செய்யக்கூடிய ஒரு நிறுவனமாகும். தொற்றுநோயின் ஆரம்பத்தில், கோவிட் -19 ஐ தணிப்பதற்கான நமது தேசிய முயற்சிகளுக்கு எங்களை ஆதரிக்க டயலொக் நிறுவனத்தை அணுகியபோது, டயலொக் நாட்டின் முக்கியமான சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த அப்போதே 2000 இலட்சம் ரூபாய்க்கான உறுதி மொழியினை வழங்கியது.
இந்த உறுதிமொழியானது நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யு மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் Hi-Speed robotic பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு வழிவகுத்தது.
ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் ICU வளர்ச்சி என்பது இந்த முயற்சிகளின் விளைவாக பலனளித்த சமீபத்திய முயற்சியாகும்இ இதற்காக இலங்கையர்களாகிய நாம் ஒரு தேசமாக இணைந்து மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என தனது உறையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் கௌரவ (டாக்டர்) பந்துல குணவர்தன, பல மக்களுக்கு சிகிச்சையளிக்கும் ஹோமாகம அடிப்படை மருத்துவமனை நீண்ட காலமாக காணப்பட்டு வந்த குறைபாடுகளில் ஒன்றாகிய ICU நிறுவப்பட்டுள்ளது.
ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் இந்த முழுமையாக செயற்படும் ICU ஐ அறிமுகப்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம். இத்தகைய முன் முயற்சிகளை மேற்கொண்டு அதை மிகவும் சாத்தியமாக்கியமைக்காக "அரசாங்கத்தின் சார்பாக டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.
இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாகி சுபுன் வீரசிங்ஹ தெரிவிக்கையில், “கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய 10 படுக்கைகள் கொண்ட ICU ஐ நிறுவுவதற்கான வாய்ப்பு கிடைத்தமையையிட்டு மகிழ்சியடைகின்றோம்.
எங்களுடைய தனித்துவம் மிக்க சேவைகளின் ஊடாக எமது சமூகங்களை ஒன்றிணைத்து அத்தகைய சிக்கலான நிலமையினை கடந்து செல்வதற்கு உதவும் வேளையில், இந்த முன் முயற்சியானது பொது சுகாதார அவசர தேவைகளுக்கு பதிலளிப்பதற்கு நமது நாட்டின் திறனை பலப்படுத்தும். எங்கள் வாடிக்கையாளர்களின் விசுவாசம் மற்றும் டயலொக் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அமைய சவாலான நேரத்தில் நம் நாட்டுக்கு உதவ எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு நாங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்” என தெரிவித்தார்.
டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட முழுமையான செயல்பாட்டுடன் கூடிய ICU பற்றி விளக்கமளிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago
44 minute ago
1 hours ago