2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

மும்மொழிகளிலும் செயற்படும் Q+ கொடுப்பனவு செயலி

Freelancer   / 2024 ஜூன் 17 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா QR சான்றிதழ் அளிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நடமாடும் கொடுப்பனவு செயலியான Q+ கொடுப்பனவு செயலி இப்போது மும்மொழிகளிலும் விரிவாக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் சிங்கள மற்றும் தமிழ் வடிவங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நிட்டம்புவயிலும் யாழ்ப்பாணத்திலும்; இடம்பெற்ற வெவ்வேறு நிகழ்வுகளில் இந்த புதிய அறிமுகங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கொமர்ஷல் வங்கியால் வலுவூட்டப்பட்ட இந்த Q+ கொடுப்பனவு செயலி தற்போது பாவனையாளர்களின் விருப்பு மொழியில் கிடைக்கின்றது. இந்த செயலியையும் அதன் கொடுப்பனவு தெரிவையும் பயன்படுத்துவது தற்போது நாடு முழுவதும் உள்ள விரிவான வாடிக்கையாளர் தளத்துக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

Q+ கொடுப்பனவு செயலியின் சிங்கள வடிவத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வு நிட்டம்புவையில் உள்ள நிஹால் பெஷன்ஸ் கடைத் தொகுதியில் இடம்பெற்றது. இந்த நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் பொருள் கொள்வனவுக்கான கொடுப்பனவை Q+ மூலம் மேற்கொள்ளும்பட்சத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்கும் ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் இந்த அறிமுகம் இடம்பெற்றதாக வங்கி அறிவித்துள்ளது. கொமர்ஷல் வங்கி கார்ட் நிலைய தலைவர் நிஷான்த டி சில்வா, வங்கியின் கொழும்பு மெட்ரோ பிரிவு பிராந்திய முகாமையாளர் ஹேமன்த சூரியபண்டார, பிரதேசத்தை சேர்ந்த கிளை முகாமையாளர்கள் மற்றும் நிஹால்; குழுமத்தின் முகாமைத்துவம் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Q+ கொடுப்பனவு செயலியின் தமிழ் வடிவத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள TCT மல்டி டிரேட் சென்டர் வளாகத்தில் இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கி கார்ட் நிலைய தலைவர் நிஷான்த டி சில்வா, வட பிராந்திய பிரதேச முகாமையாளர் ஏ. ஜெயபாலன், கிளைகள் பலவற்றின் முகாமையாளர்கள், வங்கியின் பிராந்திய ரீதியான சிரேஷ்ட அதிகாரிகள் TCT மல்டி டிரேட் சென்டர் ஊழியர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .