Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ComBank Digital' தளம், அதிக உள்ளடக்கம் மற்றும் அதிக பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மும்மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,
இந்த வளர்ச்சி தொடர்பாக கொமர்ஷல் வங்கி தெரிவிக்கையில், இந்த தளத்தின் பன்மொழி திறன் கிராமப்புறங்களிலும் பாரம்பரியமான வாடிக்கையாளர் பிரிவுகளிலும் டிஜிட்டல் வங்கியை ஏற்றுக்கொள்வதை துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் – உதவிப் பொது முகாமையாளர் பிரதீப் பந்துவன்ஸ, அதன் பன்மொழிச் செயற்பாட்டின் ஊடாக வங்கிக் கணக்கற்ற மற்றும் குறைந்தளவு வங்கிகளை பயன்படுத்துவோருக்கான நிதிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும் ComBank Digital உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
1.2 மில்லியன் பயனர்களுடன், ComBank Digital ஏற்கனவே எங்களின் நிலைத்தன்மைக்கான வீதி வரைபடத்தில் குறிப்பிடத்தக்க அங்கமாக உள்ளது, ஆனால் பயன்பாட்டின் அடிப்படையில் மக்கள் தொகை மற்றும் புவியியல் இடைவெளிகள் இன்னும் உள்ளன, இதனை குறைப்பதற்கு பயனர்களுக்கு சிங்களம் அல்லது தமிழில் பரிவர்த்தனைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தேர்வினை நாங்கள் வழங்குகிறோம் என்றும் பந்துவன்ஸ கூறினார். 'இது சில வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு பயன்பாட்டை எளிதாக்குவதுடன் மற்றும் தளத்தில் பாரியளவு எண்ணிக்கையானோரை பதிவு செய்ய ஊக்குவிக்கும்.'
அனைத்து இணையத்தள (Online) மற்றும் மொபைல் பேங்கிங் ஊடகங்களின் ஒருங்கிணைப்பாக, ஒரே ஒரு சர்வ-ஊடக தளத்தில், இயங்கும் ComBank Digital ஆனது, பதிலளிக்கக்கூடிய வலை பயன்பாடு மற்றும் மூன்று மொபைல் பயன்பாடுகள் (iOS, Android மற்றும் Huawei) மூலம் வழங்கப்படுகிறது. இது மேசைக்கணினி, மடிக்கணினி, டாப்புகள் மற்றும் ஸ்மாரட் கையடக்கத் தொலைபேசிகள் (desktop PCs, laptop computers, tabs and smart phones) போன்ற அனைத்து சாதனங்களிலும் அணுகலை செயற்படுத்துகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
2 hours ago