2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

முதற்றர கணினி விற்பனையாளராக சிங்கர் ஸ்ரீ லங்கா

Editorial   / 2020 ஒக்டோபர் 02 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி நுகர்வோர் பாவனைப் பொருட்கள் விற்பனையாளராக கருதப்படும் சிங்கர், இலங்கையின் முதல்தர கணினி விற்பனையாளர் எனும் நிலையை எய்தியுள்ளதாக சர்வதேச தரவு கூட்டுத்தாபனத்தின் (IDC) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிகள், தையல் இயந்திரங்கள் என பரந்தளவு பொருட்கள் தெரிவைக் கொண்டுள்ள சிங்கர், ஒப்பற்ற சந்தை முன்னோடி என்பதை இந்த நிலை மேலும் உறுதி செய்துள்ளது.

நுகர்வோர் மின்சாதன துறையில் ஆழமான உள்ளம்சங்களை பெற்றுக் கொடுப்பதற்கு மாசற்ற மேன்மை என்பதன் பிரகாரம், நுகர்வோரின் கணினி தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு 2000ஆம் ஆண்டின் முற்பகுதி முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இன்று, தனது பிரசன்னத்தை மேலும் உறுதி செய்துள்ள சிங்கர், முதல்தர கணினி விற்பனையாளர் எனும் வகையில் முன்னணி வர்த்தக நாமங்களான Dell, Asus, Huawei மடிக்கணினிகளை விற்பனை செய்கின்றது.

இந்த சாதனை தொடர்பில் சிங்கர் ஸ்ரீ லங்கா பி.எல்.சி. இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,

“முதல்தர கணினி விற்பனையாளர் என தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, டிஜிட்டல் தயாரிப்புகளின் பிரசன்னத்தை மேம்படுத்துவது எனும் நிறுவனத்தின் மூலோபாயத்திட்டத்துக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் கணினிகள் சந்தைப் பிரசன்னம் என்பது 26 சதவீதமாக அமைந்திருந்த நிலையில், கொவிட்-19 தொற்றுப் பரவலுடன், நுகர்வோரின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இந்தப் பிரிவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுதல், கல்விச் செயற்பாடுகளை தொடர்தல் மற்றும் ஈடுபாடுகளை பேணுதல் ஆகியவற்றூடாக, டிஜிட்டல் தயாரிப்புகளின் கேள்வி அதிகரித்திருந்த நிலையில், இந்தக் கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில், எமது பரந்தளவு கணினிகள் அமைந்துள்ளன. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதி வாய்ந்த மற்றும் தரமான தயாரிப்புகளை வழங்குவதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், எமது நிலையை தொடர்ந்தும் உயர் நிலையில் பேணுவதற்கு எதிர்பார்க்கின்றோம்”  என்றார்.

விற்பனையை அதிகரித்து, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும் நிறுவனத்தின் ஆற்றல் என்பதில் நிறுவனத்தின் உறுதியான விநியோக கட்டமைப்பு பங்களிப்பு வழங்குகின்றது. இதில் நாடு முழுவதிலும் காணப்படும் சிங்கர் ப்ளஸ் மற்றும் சிங்கர் மெகா அடங்கலாக, 430 விற்பனை நிலையங்கள் அடங்கியுள்ளன. மேலும் 350 க்கும் அதிகமான அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்களும் அடங்கியுள்ளனர்.

சிங்கரின் கணினி விநியோகத்தில் வெற்றிகரமான பங்களிப்பாக DELL கணினி தயாரிப்புகளின் விநியோகத்தை குறிப்பிட முடியும். DELL உடனான பங்காண்மை என்பது விற்பனைகளினூடாக சிங்கர் வியாபார பிரிவில் உயர் பெறுமதியை வழங்குகின்றது. வணிக, நுகர்வோர் பிரிவுகளில் DELL விநியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளமை என்பதும் சிங்கருக்கு சிறந்த பெறுபேறுகளை எய்த பங்களிப்பு வழங்கியுள்ளது.

இந்த பங்காண்மை தொடர்பாக னுநுடுடு டெக்னொலஜிஸ் ஸ்ரீ லங்கா, மாலைதீவுகளுக்கான முகாமையாளர் கிறிஷான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “எமது பங்காளர்கள் DELL டெக்னொலஜிஸ் உடன் அங்கத்துவம் பெறுபவர்களாக திகழ்வதுடன், சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். இத்துறையில் தனது முன்னோடியான நிலையை சிங்கர் பேணி வருவதுடன், இந்த நெருக்கடி நிலைகளில் எழுந்துள்ள சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க சிங்கர் பெருமளவு பங்களிப்பு வழங்குகின்றது” என்றார்.

முன்னிலை நுகர்வோர் பராமரிப்பு, கவர்ச்சிகரமான வாடகை கொள்வனவு வசதிகள் மற்றும் போட்டிகரமான விற்பனைக்கு பிந்திய சேவைகள் போன்றவற்றினூடாக, உயர் சேவைத் தரம் காரணமாக, இத்துறையில் சிங்கர் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தகவல் தொழில்நுட்ப திறனை எய்த, சிங்கரின் வாடகை கொள்வனவு திட்டம் அனுகூலமளிப்பதாக உள்ளது.

மேலும், முன்னணி வங்கிகள் உடனான பிரத்தியேகமான உடன்படிக்கைகளினூடாக, சிங்கருக்கு கவர்ச்சிகரமான கடன் அட்டை விலைக்கழிவுகளையும், இலகுமுறை கொடுப்பனவு வசதிகளையும் கணினிகளுக்கு வழங்க முடிந்துள்ளது.

சிங்கரின் மேம்படுத்தப்பட்ட e-commerce மற்றும் சமூக ஊடக கட்டமைப்புகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சௌகரியமாக கணினிகளை கொள்வனவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிங்கரின் e-commerce கட்டமைப்பான www.singer.lk என்பது, தற்போது கணினிகளை கொள்வனவு செய்ய முன்னணித் தெரிவாக அமைந்துள்ளது.

சிங்கர் ஸ்ரீ லங்கா நுகர்வோருக்கு பரந்தளவு உயர் தரம் வாய்ந்த சர்வதேச வர்த்தக நாமங்களை பெற்றுக் கொடுப்பதில் புகழ்பெற்றுள்ளது. நுகர்வோருடன் ஈடுபாட்டை பேணுவதுடன், நாட்டின் மாபெரும் விநியோக வலையமைப்பையும் தன்வசம் கொண்டுள்ளது. 430 க்கும் அதிகமான விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. உயர் e-commerce கட்டமைப்பினூடாக நாடு முழுவதிலும் 600 க்கும் அதிகமான விநியோகத்தர்களைக் கொண்டு சேவைகளை வழங்கி வருகின்றது.

நுகர்வோருக்கு சிறந்த விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்குவதற்கான வலையமைப்பையும் கொண்டுள்ளது. கொள்வனவுகளை மேற்கொள்ளும் போது நுகர்வோருக்கு பெருமளவு நெகிழ்ச்சித்தன்மையை சிங்கர் உறுதி செய்வதுடன், வட்டியில்லாத தவணை முறை, விசேட விலைக்கழிவுகள், பண்டமாற்று விலைக்கழிவுகள், இலவச சலுகைகள், கடன் அட்டை சலுகைகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன. அவ்வாறான முயற்சிகளுக்கு நிறுவனம் பல்வேறு விருதுகளை சுவீகரித்துள்ளதுடன், இதில் பதின்நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக மக்களின் விருப்பத்துக்குரிய நாமமாகவும் சிங்கர் தெரிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .