Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, ஸ்ரீ சம்போதி மையத்துடன் இணைந்து, நாடு முழுவதையும் சேர்ந்த மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வியை தொடர்வதற்கு இலவச இணைப்பு வசதியை ஏற்படுத்தும் வகையில் ‘Sip Nena Dayada’ நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்ரீ சம்போதி மையத்தினால் தெரிவு செய்யப்பட்ட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு டெப்லட் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்ததுடன், SLT-MOBITEL இனால் இலவசமாக இணைப்பு வசதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தடங்கலின்றி மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்வதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டிருந்தது.
SIMகளைக் கொண்ட முதல் தொகுதி சாதனங்கள் வட மேல் மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. மாகாணத்தின் பின்தங்கிய பாடசாலைகளின் மாணவர்களுக்கு இந்த டெப்லட்கள் வழங்கப்பட்டிருந்தன. பௌத்த நம்பிக்கை மையத்தின் அதிகாரிகள் மற்றும் SLT-MOBITEL பிராந்திய முகாமையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, புத்தளம், நிக்கவரெட்டிய மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தமது கல்வியைத் தொடர்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
நிதி நெருக்கடிகள் மற்றும் இணைப்புத்திறன் வசதியற்ற மாணவர்களுக்கு உதவும் வகையில், SLT-MOBITEL ஆனது ஸ்ரீ சம்போதி மையத்துடன் இணைந்து நாடு முழுவதிலும் இந்த கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago