Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
S.Sekar / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் வங்கியின் வர்த்தக சேவைகள் - சர்வதேச வங்கிச்சேவைப் பிரிவுக்குஇ மூன்றாவது முறையாகவும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் (SLSI), SLS ISO 9001:2015 அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம், உயர்தர வர்த்தக சேவைகளை வழங்குவதற்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கும் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
மக்கள் வங்கியின் வர்த்தக சேவைகள் பிரிவானது, 743 கிளைகள் மற்றும் சேவை மையங்களுடன், நாட்டின் மிகப்பெரிய வணிக வங்கி வலையமைப்பிற்கான ஒரு மத்திய செயலாக்க பொறிமுறையை வழங்குகிறது. 14.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனைகளை எளிதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்கும் வகையில் இலகுவான பாவனை கட்டமைப்புகளுடன் வங்கி இணைக்கப்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் வர்த்தகச் சேவைகள் - சர்வதேச வங்கிப் பிரிவு; 2013 ஆம் ஆண்டில் SLSI இடமிருந்து முதல் தடவையாக அங்கீகாரத்தைப் பெற்றதுடன், SLS/ISO 9001:2008 மற்றும் 9001:2015 தரநிலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர், 2016 மற்றும் 2018 இல் மீண்டும் அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த பிரிவு 2022 இல் SLSI ஆல் மீண்டும் ஒருமுறை கணக்காய்வு செய்யப்பட்டதுடன், தொடர்ந்து மூன்றாவது முறையாக மீள்சான்று அங்கீகாரத்துக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மக்கள் வங்கியின் வர்த்தக சேவைகள் பிரிவு அதன் வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான மற்றும் உயர்தர சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பேணுவதற்கும், திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் மூலம் சரியான நேரத்தில் மற்றும் உடனடி நடவடிக்கைகளுடனான சேவைகளை வழங்குவதற்கும் வங்கி உழைத்து வருகிறது. வங்கி தனது வாடிக்கையாளர்களின் வேகமாக மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வலுவான கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
41 minute ago
1 hours ago