Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 16 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் வங்கி நாட்டின் நுண்ணிய,சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) அபிவிருத்திக்காக திட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் அபிவிருத்திச் சபையுடன் (IDB) கூட்டிணைந்துள்ளது.
இக்கூட்டிணைவினை அறிவிப்பதற்காக ஒரு சிறப்பு நிகழ்வினை சமீபத்தில் மக்கள் வங்கி தமது பணியாளர் பயிற்சிக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவங்ச – சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அபிவிருத்தி, எம்.ஏ. ரஞ்சித் – செயலாளர், கைதொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சு, என்.ஜீ. பண்டிதரத்ன – மேலதிக செயலாளர், கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அபிவிருத்தி, உப சேனதிசாநாயக – தலைவர், பணிப்பாளர் நாயகம், IDB கே.எம்.எஸ்.ஜீ. பண்டார – பிராந்திய அபிவிருத்திப் பணிப்பாளர், IDB ,ஆகியோரும் மக்கள் வங்கியின் தலைவர் – சுஜீவ ராஜபக்ஷ, பிரதான நிறைவேற்றுஅதிகாரி / பொதுமுகாமையாளர் – ரஞ்சித் கொடிதுவக்கு மற்றும் கிரிஷானி நாரங்கொட–பிரதி பொதுமுகாமையாளர் (நிறுவனவங்கி) என்போருடன் மக்கள் வங்கியின் பணியாட்தொகுதியினர் கலந்து கொண்டனர்.
ஒப்பந்தத்திற்கு அமைய மக்கள் வங்கி மற்றும் IDB உடன் இணைந்து சுமார் 5000 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஆதரவுடனும் முறையான நிதி வசதிகளுடனும் தங்கள் வணிகங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திட முடிவு செய்துள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி மாற்றீடு, உள்நாட்டு மதிப்பு கூட்டல் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் போன்றவற்றுக்கு இத்தொழிற்துறைகளை மிகுந்த திறன்களுடன் மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
மக்கள் வங்கி வழங்கிடும் தனிப்பயனாக்கப்பட்ட கடன் வசதிகளால் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படும். நிர்வாக தொழில்நுட்பரீதியாக மற்றும் IDB சந்தை அணுகல் வழியாக கண்டறியப்பட்ட மற்றும் வலுவூட்டப்பட்ட MSME க்கள் நிதியுதவிகளுக்காக வங்கிக்கு அனுப்பப்படுகின்றனர். திட்டத்தின் தேவை, நிதி வழங்கிடக்கூடிய சாத்தியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய கடன் தொகை தீர்மானிக்கப்படும். சம்பந்தப்பட்ட SME கடன் தயாரிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு கடன்கள் வழங்கப்படும். கடன்களை பின்தொடர்வது மற்றும் மதிப்பாய்வு செய்வது, வணிகங்களை அளவிடுவது ஆகியவை IDB உடன் இணைந்து மக்கள் வங்கியால் மேற்கொள்ளப்படும்.
இது வங்கித் தொழிற்துறையில் ஒரு புரட்சிகர நகர்வாகும். இங்கு இலங்கையின் தொழில்முனைவோரை வளர்ப்பதற்கு இருக்கும் அத்தியவசியத்தை உணர்ந்து இரண்டு அரசுநிறுவனங்கள் ஒன்றிணைகின்றன.
இப்போது வாடிக்கையாளர்கள் IDB யில் பதிவு செய்து ஒரு விரிவான பயிற்சிக்கு உட்பட்டு, வங்கி முகாமையாளரை சந்திக்கும் முன் புஒரு நடைமுறை வணிகத் திட்டத்தை உருவாக்கலாம். எனவே வாடிக்கையாளரின் தேவையை மதிப்பிடுவதற்கும், அவருக்கு பொருத்தமான, தனிப்பயனாக்கப்பட்ட கடன் பக்கேஜினை வழங்குவதற்கும் வங்கிமுகாமையாளருக்கு வசதியாக இருக்கும்.
நாடு முழுவதும் உள்ள பிராந்தியமையங்கள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை உருவாக்குவதற்கும் அவர்களது அனுபவமிக்க ஊழியர்களுடன் வாடிக்கையாளர்களை மேம்படுத்திடவும் IDB க்கு பலம் உள்ளது. முன்மொழிவுகளை மதிப்பிடுவதற்கும் ,அதன் மிகப்பெரிய கிளை வலையமைப்பின் மூலம் வாடிக்கையாளர் உறவுகளை வளர்ப்பதற்கும் சிறப்பு பிராந்திய கடன் பிரிவுகளுடன் மக்கள் வங்கி மிகப் பெரிய அணுகலைக் கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
42 minute ago
25 Apr 2025
25 Apr 2025