2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

’மக்களின் தனியார் வங்கியாக’ கொமர்ஷல் வங்கி

Freelancer   / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIM Kantar People's Awards 2024 விருதுகள் நிகழ்வில் கொமர்ஷல் வங்கி, '2024 ஆம் ஆண்டிற்கான மக்களின் தனியார் வங்கியாக' தெரிவு செய்யப்பட்டுள்ளது, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இந்த விருதினை பெற்றதன் மூலம் நாட்டில் மிகவும் பிரபலமான தனியார் துறை வங்கியாக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பல்வேறு வகை பிரிவுகளில் நாட்டின் விருப்புக்குரிய வர்த்தக நாமங்களைத் தீர்மானிப்பதற்கான வருடாந்த கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் (SLIM) இந்த கௌரவமிக்க விருதானது வங்கிக்கு வழங்கப்பட்டது.

31 டிசம்பர் 2023 இல் 2.656 டிரில்லியன் ரூபாய் குழும சொத்துக்கள், 2.148 டிரில்லியன் ரூபாய் வைப்புத்தொகை, 1.296 டிரில்லியன் ரூபாய் கடன் புத்தகம் மற்றும் 341.566 பில்லியன் ரூபாய் மொத்த வருமானம் ஆகியவற்றுடன் இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக திகழும் கொமர்ஷல் வங்கி நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு (SME) ஒட்டு மொத்த மிகப் பாரிய கடன் வழங்குநராகவும் திகழ்கிறது.

இந்த மக்கள் விருதானது மக்களின் அன்றாட வாழ்வில் வங்கி வகிக்கும் பிரதான பங்கு, அனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளுக்கும் பொருத்தமான மற்றும் அணுகக்கூடிய புதுமையான தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளுடன் அவர்களின் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அதன் இடைவிடாத முயற்சி ஆகியவற்றுக்கு மக்கள் வழங்கியுள்ள அங்கீகாரத்தையே பிரதிபலிப்பதாக வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பாரிய சமூகமான வாடிக்கையாளர்களின் மீதுள்ள ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நிலைத்தன்மையின் மீது அசைக்க முடியாத கவனம் செலுத்துவதன் மூலம் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பினையும் இது வெளிப்படுத்துவதாகவுள்ளது. அதன் பன்மொழி தன்மை மற்றும் உள்ளடக்கிய சந்தைப்படுத்தல் பிரசாரங்கள், தேசிய ரீதியிலான நிகழ்வுகளுக்கான அனுசரணை மற்றும் முன்னோடி டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரங்கள் ஆகியவை மூலம் அனைத்து சமூகங்கள் மீதான வங்கியின் அர்ப்பணிப்பானது தெளிவாகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .