2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

மக்களின் தனியார் வங்கி வர்த்தக நாமமாக கொமர்ஷல் வங்கி

Freelancer   / 2025 ஏப்ரல் 11 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIM Kantar மக்கள் விருதுகள் 2025 நிகழ்வில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆண்டுக்கான 'மக்களின் தனியார் வங்கி சேவைகள் வர்த்தக நாமமாக˜ கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகவும் பிரபலமான தனியார் துறை வங்கி என்ற வங்கியின் நிலையை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இந்த விருதுகள் நிகழ்வு, முன்னணி உலகளாவிய நுண்ணறிவு நிறுவனமான Kantar இன் ஆய்வின் அடிப்படையில் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) நடத்தப்படுவதுடன் இவ்விருதுகள் இலங்கையில் நுகர்வோர் சார்ந்த அங்கீகாரத்திற்கான இறுதி சான்றாகக் கருதப்படுகின்றன. இவை நிபுணர்கள் குழுவால் அல்லாமல், நுகர்வோர் வாக்குகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதுடன் மேலும் இலங்கையர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வென்ற வர்த்தக நாமங்கள் மற்றும் ஆளுமைகளை அங்கீகரிக்கின்றன.

இந்த விருதானது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் வங்கியின் சேவைகள் தொடர்ந்து ஏற்படுத்தும் சிறப்பான மாற்றங்களுக்கும், வங்கியின் வர்த்தக நாம கட்டமைப்பு முயற்சிகள் மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகளின் செயல்திறனுக்கும் ஒரு சான்றாகும் என்று வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுடனான வங்கியின் தொடர்ச்சியான ஈடுபாடு, புதுமையான பிரசாரங்கள் மற்றும் சிறந்த வங்கி அனுபவங்களை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

இலங்கையின் மிகப்பாரிய தனியார் துறை வங்கியும், நாட்டில் அதிக விருதுகளைப் பெற்ற நிதி நிறுவனமுமான கொமர்ஷல் வங்கி, நான்கு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்கி வருவதுடன் மேலும், இலங்கையில் மிகப்பாரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர் (SME) துறைக்கு மிகப்பாரிய கடன் வழங்குநராகவும் திகழ்கிறது.

கொமர்ஷல் வங்கியானது தனது வர்த்தக நாமத்தை வளர்ப்பதிலும், மூலோபாய ரீதியாக உருவாக்கப்பட்ட கருப்பொருள் தொடர்புகள் மூலம் வர்த்தகநாம பங்கினை வளர்ப்பதிலும், பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களிலும், புரட்சிகரமான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரங்கள் மூலமாகவும் நிகழ்வு நிகழ்வுகளுக்கான அனுசரணைகளை வழங்குதலிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பன்மொழி விளம்பரங்கள் மூலம் அனைத்து தகவல் தொடர்புகளிலும் உள்ளடக்கியதாக இருப்பதை வங்கி உறுதிசெய்வதுடன் மேலும் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் அணுகுகிறது. அதன் பெரு நிறுவன வலைத்தளமானது மற்றும் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் அடிப்படையில் தொழில்துறையை வழிநடத்துவதுடன் மேலும் யூடியூப், பேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய சமூக ஊடகத்தளங்களில் முன்னணி நிலையை வகிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X