Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2022 மார்ச் 28 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு வலுவூட்டி மேம்படுத்தும் செயற்திட்டமான தினன்னீ (வெல்பவள்) திட்டத்தை எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் கிறீம் அறிமுகம் செய்துள்ளது.
பெண்கள் செயலகம் மற்றும் இதர அரச சார்பற்ற முகவரமைப்புகளின் ஆதரவுடன், நாடு முழுவதையும் சேர்ந்த உதவிகள் தேவைப்படும் பெண்களை சென்றடைந்து, ஐஸ் கிறீம் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களை ஈடுபடுத்தி ஆதரவளிப்பதற்கு முன்வந்துள்ளது. அதன் பிரகாரம் ஐஸ் கிறீம் விற்பனை மற்றும் விநியோகம் அல்லது ஐஸ் கிறீம் உற்பத்திக்கு அல்லது விற்பனைக்கு அவசியமான மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதில் பங்களிப்பு வழங்குவதில் பெண்களை ஈடுபடுத்த முன்வந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை செயலணி மற்றும் நடமாடும் விற்பனைப் பகுதிகள், ஐஸ் கிறீம் விற்பனை நிலையங்கள் மற்றும் விநியோக வலையமைப்புகளில் பெண் ஊழியர்களை உள்வாங்கும் வகையில் விற்பனைச் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்படவுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் தேசிய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “எய” (அவள்) நிகழ்ச்சிக்கு எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் கிறீம் அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிகழ்வு மார்ச் மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இந்த தேசிய நிகழ்வில் இலங்கையின் பிரதமர் பங்கேற்றிருந்ததுடன், 1700க்கும் அதிகமான பெண் தொழில்முயற்சியாளர்களை கவர்ந்திருந்தது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உப தலைவரும், உறைய வைக்கப்பட்ட இனிப்புப் பண்டங்கள் பிரிவின் தலைமை அதிகாரியுமான சதிஷ் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “தமது நேரத்தையும் உடல் சிரத்தையும் குடும்பத்துக்காகவும், சமூகத்துக்காகவும் அர்ப்பணித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் முன்னோடிகளாக திகழ்கின்றனர் என்பதில் எலிபன்ட் ஹவுஸைச் சேர்ந்த நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது பெறுமதி சங்கிலிகளில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் One JKH நிகழ்ச்சிக்கு அமைவாக இது அமைந்துள்ளது. பெண்களுக்கு வலுவூட்டல் என்பது புதிய வழிமுறைகளை பின்பற்றவுள்ளதுடன், அதனை உயர்ந்த நிலைக்கு செல்வது எமது கடமையாகும். பெண்களின் வெற்றியீட்டும் குணவியல்பை மேலும் உணர்த்தும் வகையில் இந்தத் திட்டத்துக்கு தினன்னீ என பெயரிடப்பட்டுள்ளது.” என்றார்.
“எய” மகளிர் தின நிகழ்வில், எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் வகைகளுக்கான தனது முதலாவது பெண் பிரதேச விற்பனை முகாமையாளரான மலிந்திகா பெர்னான்டோ உரையாற்றியிருந்தார். எலிபன்ட் ஹவுஸில் தமது பயணம் மற்றும் தினன்னீ திட்டத்தினூடாக எதிர்பார்த்த ஆதரவு பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்வின் போது, காட்சிகூடத்துக்கு விஜயம் செய்து தினன்னீ திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கு பெண்கள் ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்.
சமூகத்துக்கு பெண்களின் பொருளாதார ரீதியான பங்களிப்பு, தமது சுய பெறுமதி உணர்வை ஊக்குவிப்பது, தமது சொந்த தெரிவுகளை தீர்மானிக்கும் திறன் மற்றும் தமக்காகவும் ஏனையவர்களுக்காகவும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த தூண்டும் அவர்களின் உரிமை ஆகியவற்றை பெண்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நோக்கில் தினன்னீ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. குடும்பத்தில் மகளாக, மனைவியாக தாயாக பெண் ஒருவர் ஆற்றும் பங்களிப்பு தொடர்பில் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும் என்பதுடன், தமது திறன்களை விரிவாக்கம் செய்து கொண்டு புதிய நிலைகளில் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கு ஆதரவளிக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago