Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 மே 07 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிறீம் சோடாவின் இலக்கு எப்பொழுதும் இளைஞர்கள், உற்சாகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பவற்றுடன் காணப்படுகிறது. இந்த உற்சாகமான இலக்குக்கேற்ப ஒரு புதிய திருப்பம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
எலிஃபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா வர்த்தக நாமத்தின் புதிய மாறுபட்ட சின்னமாக விளங்கக்கூடிய 'கிறீம் சோடா அப்பிள் பொப்' என்ற புதிய வர்த்தக நாமத்தை அங்குரார்ப்பணம் செய்வதையிட்டு எலிஃபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா பெருமையடைகிறது. அண்மைய வெளியீடும் நுகர்வோர் ஏற்கனவே நன்கு அறிந்த மற்றும் விரும்பும் சுவை, தரத்தைக் கொண்டதாக அமைந்திருந்தாலும், இந்த புத்துணர்ச்சியூட்டும் அப்பிள் சுவை மாற்றத்தை தரும் (1 லீட்டர், 200 மில்லி லீட்டர் பக்கற்றுக்களில் கிடைக்கிறது)
இலங்கையில் வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் முகவர் நிறுவனமான ஐசோபார் நிறுவனத்தின் கூட்டாண்மையுடன் நடத்தப்பட்ட மெய்நிகர் செயலமர்வான டிஜிட்டல் பெண் வணிகர் என்பதில் இந்தப் புதிய 'கிறீம் சோடா அப்பிள் பொப்' அறிமுகப்படுத்தப்பட்டது.
50 திறமையான வர்த்தக முயற்சியாண்மைகள் மற்றும் பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் டிஜிட்டல் அணுகுமுறைகளைக் கூட்டிணைப்பதன் ஊடாக தமது வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான நிகழ்நிலை செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. வர்த்தகத் துறையில் ஏற்கனவே வெற்றிபெற்ற தொழில்முனைவோர் இதில் ஒரு அமர்வை முன்னெடுத்திருந்தனர். இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக அடுத்த இரு அமர்வுகளும் ஐசோபார் இலங்கை நிறுவனத்தின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிபுணர்களால் முன்னெடுக்கப்பட்டன. இந்த திறமையான நபர்கள் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் தமது வர்த்தகத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்வதற்கான ஆரம்பப்பாதையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
அவர்களின் வியாபாரப் பயணத்துக்கு உதவக்கூடிய பரிசுகள் டிஜிட்டல் "බිස්නස්කාරී" பங்குபற்றுநனர்களுக்கு செயலமர்வுகளின் பின்னர் வழங்கப்பட்டன.
'இந்த அமர்வுகள் நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படையில் பயனளிக்கும் என நாம் நம்புகின்றோம். எங்கள் திறமையான இலங்கைப் பெண்கள் புதிய டிஜிட்டல் வழிகள் மூலம் தங்கள் சுய தொழில்களை வளர்ப்பதற்கு ஆதரவளிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், இது இலங்கை முழுவதிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்' என சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரும், ஜோன் கீல்ஸ் நிறுவகத்தின் உதவி பிரதித் தலைவியுமான டில்ஷானி எதிரிசிங்ஹ தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago