Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
HSBC, இலங்கையிலுள்ள பெண் தொழில் முனைவாளர்களுக்கு வலுவூட்டுவதற்காக, சர்வோதய சிரமதான அமைப்புடன் (LJSSS) பங்காளித்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலுள்ள ஐந்து மாகாணங்களில் பெண் தொழில் முனைவாளர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான சவால்களை நிவர்த்தி செய்வதும், அவர்களின் வியாபார வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கிக்கொடுப்பதும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். 40 மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் கடந்த மாதம் இந்த இரண்டு வருட திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத் திட்டம், சர்வோதயவின் அபிவிருத்திக்கான ICT பிரிவான சர்வோதய-ஃயியூஷன் ஊடாக சர்வோதய இயக்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்.
இக் கூட்டு முயற்சியின் கீழ், நாட்டின் மேற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 150 பெண்களின் தலைமையிலான சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகளுக்கு (SMEs) விரிவான உதவிகளும் பயிற்சியும் வழங்கப்படும். தமது வியாபார அறிவை மேம்படுத்துவதற்கும் பேண்தகு வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் அவசியமான திறன்கள், அறிவு மற்றும் மூலவளங்களை இப் பெண் தொழில் முனைவாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே திட்டத்தின் குறிக்கோளாகும்.
HSBC இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சேர்ஜ்னர், இப் பங்காளித்துவம் பற்றிக் குறிப்பிடுகையில், 'இலங்கையிலுள்ள பெண் தொழில் முனைவாளர்களின் நிலையை மேம்படுத்தவும் அவர்களுக்கு வலுவூட்டவும் இடமளிக்கும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வேலைத்திட்டத்தில் LJSSS உடன் இணைந்து செயற்படுவது குறித்து நாம் பெருமையடைகின்நோம். எமது மக்களுக்கும் வியாபாரங்களுக்கும் மாத்திரமன்றி, நாம் செயற்படுகின்ற சமூகங்களுக்கும் விரிவான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென HSBCயிலுள்ள நாம் நம்புகின்றோம். பெண்களின் தலைமையிலான இந்த வியாபாரங்களின் உள்ளார்ந்த ஆற்றலில் முதலீடு செய்வதும், பெண் தொழில் முனைவாளர்களுக்கு அவசியமான வசதிகளையும் மூலவளங்களையும் வழங்கி அவர்களுக்கு வலுவூட்டுவதும் வறுமை ஒழிப்பு, தொழில்களின் உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்தமான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யும் என்பது எமது நம்பிக்கையாகும்' என்று கூறினார்.
சர்வோதய இயக்கத்தின் தலைவர் கலாநிதி. வின்யா ஆரியரத்ன கருத்து வெளியிடுகையில், 'பெண் தொழில் முனைவாளர்களுக்கு வலுவூட்டுவதற்கான இப் புதிய முயற்சியில் ர்ளுடீஊ உடன் கூட்டுச் சேர்ந்திருப்பது குறித்து நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். எமது இருதரப்புக்களினதும் நிபுணத்துவம் மற்றும் மூலவளங்களைக் கூட்டிணைத்துப் பயன்படுத்துவதன் மூலம் பெண் தொழில் முனைவாளர்களின் வளர்ச்சிக்கு வழிகோலவும் அவர்கள் தற்சமயம் எதிர்நோக்கப்படும் தடைகளை முறியடிப்பதற்கு உதவவும் உகந்ததொரு சூழலை எம்மால் உருவாக்க முடியும். இப் பெண்களுக்கு வலுவூட்டவும் அவர்களின் வியாபாரங்களை மேம்படுத்தவும் அதன் மூலம் இலங்கையில் பெண் தலைமையிலான தொழில் முனைவாண்மையின் ஒரு புதிய அலையைத் தூண்டவும் ஒருங்கிணைந்து முயல்வதே எமது நோக்கமாகும்' என்று குறிப்பிட்டார்.
ஆற்றல்களை மேம்படுத்துவதற்கான செயலமர்வுகள், வழிகாட்டுதல் திட்டங்கள் மற்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி அமர்வுகள் ஊடாக, தொழில் முனைவாண்மையின் பல்வேறு துறைகளில் இந்த வேலைத்திட்டம் கவனம் செலுத்தும். நிதி முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் உபாயங்கள், உற்பத்திப் பொருள் உருவாக்கம், சந்தையை அணுகும் வாய்ப்பு என்பனவும் இத் துறைகளில் உள்ளடங்கும். இந்த வேலைத்திட்டத்தில் பங்குபற்றும் SME தொழில் முயற்சிகள் விரிவடைந்துவரும் வியாபார அரங்கில் தமது போட்டி நிலையை மேம்படுத்திக்கொள்ள உதவும் பொருட்டு, அவற்றிற்கு டிஜிட்டல் மாற்ற மற்றும் தொழில்நுட்பத் தழுவல் தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
இலங்கையில் பெண்களுக்கு வலுவூட்டுதல், பொருளாதார ரீதியாக அவர்களை உள்ளடக்குதல், அவர்களின் சமூக அபிவிருத்தி ஆகிய விடயங்களில் HSBC மற்றும் சர்வோதய இயக்கம் ஆகியவற்றின் பொதுவான அர்ப்பணிப்பை இந்த முன்முயற்சி எடுத்துக்காட்டுகின்றது. பெண்களின் தலைமையிலான SME தொழில் முயற்சிகளுக்கு வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யும் ஒரு வளமான தொழில் முனைவாண்மைச் சூழலமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
பெண் தொழில் முனைவாளர்களுக்கு வலுவூட்டுதல், பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தி அளிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் சிற்றலை விளைவுகளினால் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்தச் சமுதாயத்திற்கும் சாதகமான பயன்களை வழங்கும் என்று HSBC யும் சர்வோதய அமைப்பும் உறுதியாக நம்புகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago