Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மார்ச் 10 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலுக்கு தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், Baurs என அழைக்கப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், தனது பணிப்பாளர் சபையிலும், நிறைவேற்று தலைமைத்துவ பதவிகளிலும் பெண்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை கௌரவித்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது.
கூட்டாண்மைத் துறையில் உயர்ந்த பதவிகளுக்கு பெண்கள் செல்லும் போது, அவர்கள் குறைந்தளவு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர் என்பதை பல்வேறு ஆய்வுகளினூடாக கண்டறியப்பட்டிருந்தது. பாலின சமத்துவத்தைப் பேணுவதிலும், குறிப்பாக நிறுவனம் முழுவதிலும் பதவி நிலைகளில் வேறுபாடின்றி இந்த சமத்துவத்தைக் கொண்டிருப்பதிலும் Baurs அதிகளவு பெருமை கொள்கின்றது. அதன் பிரகாரம் தனது பணிப்பாளர் சபையின் இரு அங்கத்தவர்களான தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் அனோஜா பஸ்நாயக்க மற்றும் நிதியியல் பிரிவின் பணிப்பாளர் பவித்ரா சமரசிங்க ஆகியோரின் சாதனைகளை கௌரவித்துக் கொண்டாடியிருந்தது.
தனது பிரதான பெறுமதிகள் மற்றும் நோக்கத்துக்கு உண்மையாகத் திகழும் வகையில் Baurs தொடர்ச்சியாக சமகாலத்துக்கேற்ப மற்றும் வளர்ந்து வரும் வியாபார கட்டமைப்புகளில் தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்றது. சமத்துவம், பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் புத்தாக்கம் ஆகிய கலாசார அம்சங்களை நிறுவனம் ஊக்குவிக்கின்றது.
Baurs இல் அஜோனா பஸ்நாயக்கவின் பயணம் என்பது 12 வருடங்களாக தொடர்கின்றது. 2008 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் முகாமையாளராக இணைந்து கொண்டார். இவர் தற்போது Baurs இல் குழும டிஜிட்டல் மாற்றியமைப்பு தந்திரோபாய செயற்பாடுகளுக்கு தலைமைத்துவமளிக்கின்றார். “Baurs உடனான எனது பயணத்தில், பெண்கள் துணிவான முடிவுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கப்பட்டிருந்ததுடன், தன்னம்பிக்கையை கட்டியெழுப்பும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஊக்குவிக்கப்பட்டிருந்தேன். ஒருவர் எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்கப்பட்டு, தீர்மானமெடுத்தல்களில் பங்களிப்பு வழங்குவதற்கும் உறுதியளிக்கப்படும்.” என்றார்.
“Baurs இலுள்ள சிறந்த நபர்களுடன் ஈடுபாட்டுடன் பணியாற்றுவதையிட்டு நான் எப்போதும் மகிழ்ச்சியாக உணர்ந்துள்ளேன். பன்முகத்தன்மை மற்றும் உள்ளார்ந்த தன்மை போன்றன சிறந்த நிலையில் காணப்படுவதுடன், பெண்கள் பணியிடத்துக்கு கொண்டு வரும் வலிமைகள் மற்றும் பங்களிப்புகள் தொடர்பில் அவர்கள் உண்மையில் புரிந்து கொண்டுள்ளனர். நான் இங்கு காணும் பரஸ்பர மதிப்பு மற்றும் பராமரிப்பு போன்றன எப்போதும் என்னை உறுதியாக வளர்த்துக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருந்தன.” என்றார்.
இந்த ஆண்டு Baurs உடன் தனது 20 வருடப் பூர்த்தியைக் கொண்டாடும் பவித்ரா சமரசிங்க, நிறுவனத்தின் நிதியியல் செயற்பாடுகள், வளர்ச்சி மற்றும் நீண்ட கால நிலைபேறாண்மை ஆகிய செயற்பாடுகளை நிதியியல் பிரிவின் பணிப்பாளராக நிர்வகிக்கின்றார். “பன்முகத் தன்மை என்பது நிறுவனத்துக்கு பெருமளவு பெறுமதி சேர்ப்பதாக அமைந்துள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். நான் தெரிந்திருக்க வேண்டும், ஏனெனில் நான் Baurs இல் பணியாற்றுகின்றேன். Baurs இல் எனது நீண்ட கால தொழில் வாழ்க்கையில் எந்தவொரு வாய்ப்புக்கும் அல்லது அனுகூலத்துக்கும் நான் ஓரங்கட்டப்படவில்லை. நான் விதிவிலக்கல்ல, இங்கு பணியாற்றும் அனைவரும் எவ்வித பாலினப் பாகுபாடுமின்றி சமமாக நடத்தப்படுகின்றனர்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
7 hours ago