Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 ஜூன் 21 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பிரத்தியேகமான வர்த்தக நாமமான புத்தி பெட்டிக்ஸ் தனது 52 வருட பூர்த்தியைக் கொண்டாடுவதுடன், வருட இறுதியில் நடைபெறவுள்ள கண்காட்சி நிகழ்வுக்கும் தன்னை தயார்ப்படுத்துகின்றது
புத்தி பெட்டிக்ஸ் (Buddhi Batiks) தனது 52 ஆவது வருட பூர்த்தியை ஜுன் 23ஆம் திகதி கொண்டாடியது. அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் முற்காட்சி நிகழ்வையும் கொழும்பு 7 இலுள்ள லயனல் வென்ட் கலை அரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. வர்ணமயமான வெக்ஸ் மற்றும் நிறச்சாயம் ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைந்துள்ள புத்தி பெட்டிக்ஸ் ஸ்தாபகர்களின் கொண்டாட்ட நிகழ்வில் பெருமளவு விருந்தினர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த பிரத்தியேக முற்காட்சி நிகழ்வைத் தொடர்ந்து, பொது மக்கள் பார்வையிடுவதற்காக ஜுன் 26ஆம் திகதி வரை முற்காட்சி நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்க ஏற்பாடாகியிருந்தது.
புத்தி மற்றும் ரத்னசிறி கீர்த்திசேன ஆகியோர் புத்தி பெட்டிக்ஸை 1971 ஆம் ஆண்டில் நிறுவியிருந்தனர். அக்கால கட்டத்தில், புத்தி கீர்த்தி ஒரு ஊடகவியலாளராக திகழ்ந்தார். அவரது பிறந்த நாளுக்காக அவரின் மனைவியால், பத்திக் சட்டை ஒன்றை பரிசாக வழங்க எண்ணினார். அதற்காக கிராமத்தைச் சேர்ந்த பத்திக் கலைஞரை அவர் தொடர்பு கொண்ட போதிலும், உரிய நேரத்தில் சட்டை தயாராகியிருக்கவில்லை. அவர் அதிருப்தியடைந்த போதிலும், புத்தி தாம் ஒரு கலைஞர் என்பதால், நாம் இணைந்து சட்டையை தயாரிப்போம் என்றார். அவர்கள் தயாரித்த முதலாவது பத்திக் உற்பத்தியாக அது அமைந்திருந்தது. முயற்சி சிறப்பாக கைகூடவே, அதனை ஒரு வியாபாரமாக முன்னெடுப்பதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.
தமது இல்லத்துக்கு பின்பகுதியில் தொழிற்சாலை ஒன்றை நிறுவினர். அத்துடன், முன்பகுதியில் விற்பனை நிலையமொன்றையும் நிறுவினர். இந்த விற்பனையகத்துக்கு பல சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்வதுடன், அவர்களை ஐரோப்பாவில், குறிப்பாக ஸ்கன்டினேவியா மற்றும் ஜேர்மனியில் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்துமாறும், விற்பனை செய்யுமாறும் அழைத்திருந்தனர். இந்தப் பயணங்களினூடாக திரட்டிய நிதியைக் கொண்டு தமது வியாபாரத்தை விரிவாக்கம் செய்தனர்.
புத்தி பெட்டிக்ஸ் ஸ்தாபகர் புத்தி கீர்த்திசேன கருத்துத் தெரிவிக்கையில், “புத்தி பெட்டிக்ஸ் ஸ்தாபிக்கப்பட்டு 50 வருடங்களுக்கு மேலான வருட பூர்த்தியை கொண்டாடுவதையிட்டு எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மிக்க மகிழ்ச்சி. பேரவாவாக ஆரம்பித்த இந்தப் பயணம் தற்போது ஒரு அடையாளப் பெயராக மாற்றம் பெற்றுள்ளது. புத்தி பெட்டிக்ஸ் பயணத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சகல கலைஞர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். எனது மகள் தர்ஷி மற்றும் அடுத்த தலைமுறை கலைஞர்கள் எமது நாமத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வார்கள் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.
புத்தி பெட்டிக்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியும் புத்தாக்க பணிப்பாளருமான தர்ஷி கீர்த்திசேன கருத்துத் தெரிவிக்கையில், “எனது பெற்றோர் 52 வருடங்களுக்கு முன்னதாக புத்தி பெட்டிக்ஸ் எனும் நாமத்தில் ஆரம்பித்த பயணம், எனது வாழ்க்கையில் முக்கிய அங்கத்தைக் கொண்டுள்ளது. புத்தி பெட்டிக்ஸை, நவீன இலங்கை வர்த்தக நாமமாக முன்நோக்கி கொண்டு செல்ல என்னை அர்ப்பணித்துள்ளேன். இதனூடாக கலைஞர்களுக்கு வலுச்சேர்க்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், சர்வதேச தேசப்படத்தில் பத்திக் உற்பத்திகளுக்கு முக்கிய இடத்தை வழங்கும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள கண்காட்சியினூடாக, கடந்த 52 வருட காலமாக எமது தொடர்ச்சியான பணிகளின் பயனை மக்களுக்கு நேரடியாக கண்டு அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago