2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புத்தலயில் ஸ்டார் காமென்ட்ஸ் தொழிற்சாலை அங்குரார்ப்பணம்

S.Sekar   / 2021 மார்ச் 29 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்டார் காமன்ட் குரூப் (ஸ்டார்), தனது நவீன வசதிகள் படைத்த தொழிற்சாலையை மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில் நிறுவியுள்ளது. வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் தேசத்தின் பிராந்திய பொருளாதாத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்தத் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. குரூப்பின் பதினோராவது தொழிற்சாலையாக இது அமைந்துள்ளது, சுமார் 1000 பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக அமைந்திருக்கும்.

நவீன உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை இந்த தொழிற்சாலைப்பகுதி கொண்டுள்ளதுடன், உலகின் முன்னணி வர்த்தக நாமங்களுக்கு ஆடைகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் இங்கு முன்னெடுக்கப்படும். இந்தத் தொழிற்சாலையினூடாக 60 மில்லியன் ரூபாய் நேரடியாக உள்ளூர் சமூகத்துக்கு மாதாந்தம் தோற்றுவிக்கும் என்பதுடன், வருடாந்தம் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான வருமானத்தைப் பதிவு செய்து நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் பங்களிப்பு வழங்கும்.

புதிய தொழிற்சாலை அங்குரார்ப்பணம் தொடர்பில் Komar இன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சார்ளி கோமார் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த முதலீட்டினூடாக, இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கு எமது நீண்ட கால அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் பின்தங்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் பொருளாதார வலுவூட்டலை தூண்டுவதாக அமைந்திருக்கும். தொழிற்துறையின் எதிர்காலமாக இது அமைந்திருக்கும் என்பதில் சந்தேகங்கள் எதுவுமில்லை. இதில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். பாரம்பரிய கலாசாரம் மற்றும் கொள்கை என்பவற்றுக்கு அப்பால் சென்று, கூட்டாண்மை பொறுப்பில் நிலைபேறான உற்பத்தியை சமூகத்திலும் வெற்றிகரமாக இயங்கும் வியாபாரங்களிலும் உள்வாங்கும் புதிய முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம்.” என்றார்.

நான்கு தசாப்த காலப்பகுதிக்கு அதிகமான அனுபவத்துடன், இலங்கையின் ஆடைகள் உற்பத்தித் துறையின் வளர்ச்சியில் ஸ்டார் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. உலகத் தரம் வாய்ந்த ஆடைகள் விநியோக, வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் தொழிற்சாலை தற்போது 8000 க்கும் அதிகமான ஊழியர்களை தனது சகல தொழிற்சாலைகளிலும் கொண்டுள்ளது. நாட்டின் புத்தாக்கமான மற்றும் நிலைபேறான நிறுவனங்களின் வரிசையில் காணப்படும் நிறுவனம் எனும் நன்மதிப்பையும் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் 70,000 சதுர அடியிலமைந்த புத்தாக்க நிலையம் 2020 ஆம் ஆண்டின் AIA நியுயோர்க்கின் வருடாந்த வடிவமைப்பு விருதுகளில் நிலைபேறாண்மைக்கான மெரிட் விருது வெற்றியாளராக பெயரிடப்பட்டிருந்தது. தென்கிழக்கு ஆசியா பகுதியில் முதல் Passive House வடிவமைப்பாக இது அமைந்துள்ளது. பதின்நான்கு தொழிற்சாலைகளிலும் CarbonNeutral® சான்றிதழுடன், இலங்கையின் பிந்திய காபன் வெளிப்பாடற்ற நிறுவனம் எனும் அந்தஸ்தைக் கொண்டுள்ளதையிட்டு ஸ்டார் பெருமை கொள்கின்றது.

ஸ்டார் காமன்ட்ஸ் குரூப் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சுகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில், “கிராமங்கள் அல்லது நகரங்களில் சமூகங்கள் மத்தியில் நோக்கத்தின் அடிப்படையில் உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவி, தொழிற்பேட்டைகளில் காணப்படும் பாரம்பரியத்திலிருந்து அப்பால் செல்வது என்பதில் இலங்கையின் எதிர்கால ஆடைத் தொழிற்துறை தங்கியுள்ளது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது உள்ளடக்கமான பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதாக அமைந்திருக்கும் என்பதுடன், நாட்டுக்கு பல்வேறு வழிகளில் அனுகூலம் பயப்பதாக அமைந்திருக்கும். புத்தலவில் நாம் நிறுவியுள்ள எமது ஸ்டார் தொழிற்சாலை இந்த விடயம் தொடர்பான எமது ஈடுபாடு ஆர்வத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .