Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
93 Fife Residencies (Pvt) Ltd.க்கு நவீன தொலைத் தொடர்பாடல் சேவைகளை வழங்குவதற்கான உடன்படிக்கையில் SLT-MOBITEL கைச்சாத்திட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தனது அர்ப்பணிப்புக்கமைய இந்த அதிசொகுசு தொடர்மனைத் தொகுதியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் SLT-MOBITEL கைச்சாத்திட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள SLT-MOBITEL இன் தலைமையகத்தில் இந்த உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டதுடன், இதில் SLT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா, பிரதம விற்பனை மற்றும் பிராந்திய அதிகாரி இமந்த விஜேகோன் மற்றும் 93 Fife Residencies (Pvt) Ltd.இன் பணிப்பாளர்களான எம்.எம். மொஹினுதீன் மற்றும் எம்.எம். பசுஹுதீன் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இரு நிறுவனங்களின் ஏனைய பிரதிநிதிகள் பலரும் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்தப் பங்காண்மையுடன், SLT-MOBITEL இனால் 93 Fife தொடர்மனைத் தொகுதிக்கு ஸ்மார்ட் கட்டடத்துக்கு அவசியமான பின்புலம் வழங்கப்படும். விரைவில் குடியிருப்பின் வசிப்போரின் வாழ்க்கையை டிஜிட்டல் வாழ்க்கை முறையாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கொழும்பு 05 இல் அமைந்துள்ள 93 Fife Residencies தொடர்மனைத் தொகுதி, வேகமாக வளர்ந்து வரும் வணிக மையம் ஒன்றில் 40 பேர்ச் காணியில் அமைந்துள்ளது. புதிய தலைமுறையினரின் கேள்விகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தொடர்மனைத் தொகுதியில், 42 அலகு இல்லங்கள் அமைந்துள்ளதுடன், குடியிருப்பாளர்களுக்கு ஒப்பற்ற நவீன வாழ்க்கை முறை தெரிவுகளை வழங்குவதாக அமைந்துள்ளது.
அடுத்த தலைமுறை வேகத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல், சொகுசு என்பது பூரணமாகாது என்பதை SLT-MOBITEL புரிந்து கொண்டுள்ளது. எனவே, தொடர்மனைத் தொகுதிக்கான டிஜிட்டல் தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில், சகல தொகுதிகளுக்கு நவீன ஃபைபர் தொழில்நுட்பத்திலமைந்த “SLT-MOBITEL Fibre” ஐக் கொண்டு வலுவூட்டும். இதனூடாக, இந்த தொடர்மனைத் தொகுதியில் வதிவோருக்கு முன்னர் அனுபவித்திராத, 100 Mbps வேகம் வரையான ஆகக்கூடிய புரோட்பான்ட் வேகங்களை அனுபவிக்க முடியும். 93 Fife ஐச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு, SLT-MOBITEL PEOTV உடன் தடங்கலில்லாத தொலைக்காட்சி பார்வை அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
SLT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பெருமைக்குரிய முன்னணித் திட்டத்துடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக 93 Fife இல் வதிவோருக்கு உயர் தர இணைப்புத் தீர்வுகளை வழங்கி, டிஜிட்டல் சமூகத்துக்கான மதிநுட்பமான இல்லத் தொழில்நுட்பங்களை ஏற்படுத்திக் கொடுத்து நகர மத்தியிலான வாழ்க்கையை சிறந்த வகையில் முன்னெடுப்பதற்கு பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளோம்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago