2024 டிசெம்பர் 05, வியாழக்கிழமை

புகையிரத டிக்கட் பதிவு இலகுவாக்கப்பட்டுள்ளது

Freelancer   / 2024 மார்ச் 22 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து, வாடிக்கையாளர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு புகையிரத ஆசனங்களை பதிவு செய்யும் செயன்முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனூடாக பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு பெருமளவு சௌகரியத்தையும், நேரத்தை மீதப்படுத்திக் கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சகல வசதிகளையும் கொண்ட புதிய டிஜிட்டல் கட்டமைப்பில் E-Ticket மற்றும் E-Warrant தீர்வுகள் அடங்கியுள்ளன.

இந்தத் தீர்வுகளினூடாக, வாடிக்கையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுவான பயணிகள் சௌகரியமான முறையில் தமது புகையிரத டிக்கட்டை புதிய E-Ticketing தீர்வினூடாக பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் அரச ஊழியர்களுக்கும் பிரத்தியேகமான E-Warrant தீர்வினூடாக பதிவு செய்து கொள்ளலாம்.

முன்னர் ஒன்லைனில் ஆசனப் பதிவை மேற்கொண்டதன் பின்னர் புகையிரத நிலையத்துக்கு அல்லது அதற்கான சேவைப் பகுதிக்கு பயணிகள் விஜயம் செய்து டிக்கட்டின் அச்சுப்பிரதியை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், E-Ticket அறிமுகத்துடன், வாடிக்கையாளர்களுக்கு தமது முழு ஆசனப் பதிவு செயன்முறையை ஒன்லைனில் மேற்கொண்டு டிக்கட்டை தமது கையடக்க தொலைபேசியில் பெற்றுக் கொள்ள முடியும். இதனூடாக, புகையிரத நிலையங்கள் அல்லது சேவை நிலையங்களுக்கு விஜயம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன், அச்சிடப்பட்ட டிக்கட்களை கொண்டு செல்ல வேண்டிய தேவையும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தமது ஆசனப் பதிவை உறுதி செய்ததும், அவர்களின் ஸ்மார்ட்ஃபோன்களில் QR குறியீட்டுடனான E-Ticket வழங்கப்படும். இதனை தமது பயணத்தின் போது காண்பிக்க முடியும்.

மேலும், அரச ஊழியர்களுக்கான ஆசனப் பதிவு செயன்முறையில், முன்னர், இந்த அனுமதிப் பத்திரம் கொண்டவர்கள், புகையிரத நிலையத்துக்கு நேரடியாக விஜயம் செய்து ஆசனப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், தற்போது முன்கூட்டியே ஒன்லைனில் தமது பயணத்துக்கான ஆசனப் பதிவுகளை சௌகரியமாக மேற்கொள்ள முடியும். தமது அனுமதிப் பத்திரத்தின் தகவல்களை வழங்கி, குறியீட்டு இலக்கத்தை பெற்றுக் கொண்டு, அரச ஊழியர்களுக்கு தமது பதிவு செயன்முறையை எந்தவொரு mTicketing செயற்படுத்தப்பட்ட புகையிரத நிலையத்திலும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .