Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, தனது பங்குதாரர்களுடனான ஈடுபாட்டை மென்மேலும் அதிகரிக்கவும், வளர்ச்சி கண்டு வருகின்ற நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும் மற்றும் அதன் டிஜிட்டல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாகவும் தனது புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
'எப்போதும், எங்கேயும் நிதிச் சேவைகளில் சிறந்து விளங்குதல்' என்ற அதன் இலட்சியத்தின் உந்துசக்தியுடனும், அதன் மாற்றத்திற்கான மூலோபாயத் திட்டமாகவும், பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி தனது இணையத்தளம் பாவனையாளர்களுக்கு மிகவும் இலகுவாக இருப்பதை உறுதி செய்தது. இந்த இணையத்தளம் கவர்ச்சிகரமான ஈடுபாட்டு வடிவமைப்பைக் காண்பிப்பதுடன், இங்கு பாவனையாளர்கள் பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி வழங்கும் பல்வேறு நிதிச் சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.
பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபைத் தலைவரான சந்துல அபேவிக்ரம தெரிவிக்கையில், 'இரண்டு வருடங்களாக நிலவும் தொற்றுநோயால் எழுந்துள்ள பாரிய சவால்களுக்கு நாம் இப்போது முகங்கொடுக்கின்றோம். குறிப்பிடத்தக்க வகையில், வாடிக்கையாளர் சேவையில் நாங்கள் எவ்விதமான குறைகளுக்கும் இடமளிக்கவில்லை. நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த அனுபவத்தைத் தொடர்ந்து வழங்குவது மட்டுமல்லாமல், உண்மையில் நிறுவனத்தின் செயல்திறனையும் மேம்படுத்தியுள்ளோம். 'எப்போதும் எங்கேயும் நிதிச் சேவைகளில் சிறந்து விளங்குதல்' என்ற எங்கள் நிறுவன இலட்சியத்திற்கு உண்மையான அர்த்தம் கற்பிக்கும் வகையில் செயற்பட்டுள்ளமையையிட்டு நாங்கள் பெருமை கொள்கிறோம்,' என்று குறிப்பிட்டார்.
அபேவிக்ரம மேலும் விளக்கமளிக்கையில், 'பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி வணிகத்தில் 39 வருடங்களைக் கொண்டாடுகிறது. புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்துவது எமது டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கியமான முதல் படியாகும். மிகவும் ஆற்றல்மிக்க, ஈடுபாட்டுடனான மற்றும் பாவனையாளர்களுக்கு இலகுவான இணையத்தளத்தை அமைப்பதில் அணி மிகுந்த அக்கறை எடுத்துள்ளது. இணையத்தளம் மூலம் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள வாடிக்கையாளர்களை நாங்கள் எட்ட முடியும். இணை-வங்கிச்சேவை தீர்வுகளை மறுசீரமைக்கவும், வழங்கவும் பல கூட்டாளர்களுடன் நாங்கள் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளோம். எங்களின் சமீபத்திய வெற்றிகரமான மேலதிக பங்கு வழங்கல் நடவடிக்கை மற்றும் டிஜிட்டல் புத்தாக்கங்களின் பலனாக பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிதித் துறையில் இனங்காணப்படுவதற்கான ஒரு சக்தியாக வெளிப்படும் ஒரு முக்கிய ஸ்தானத்தில் உள்ளது,' என்று குறிப்பிட்டார்.
பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி இன் தலைமை நிர்வாக அதிகாரியான நளின் விஜேகோன் குறிப்பிடுகையில், 'உத்வேகம் பெற்றவர்கள் மூலம் அதிகமான மக்களின் வாழ்வை மேலும் பல இடங்களில் வளப்படுத்துவதே எங்கள் நோக்கம். அந்த இலக்கில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிளை விரிவாக்கம் ஆகிய இரட்டை மூலோபாயங்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். தற்போது, பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி 12 கிளைகளை இயக்கி வருகிறது. அத்துடன் இந்த ஆண்டு மேலும் ஆறு கிளைகளை திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து அனுமதியையும் பெற்றுள்ளோம்.' என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago