Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா, ஹட்ச் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவுத் திட்ட வாடிக்கையாளர்களுக்கு Smart Protection எனும் பிரத்தியேகமான ஆயுள் காப்புறுதித் திட்டத்தை வழங்குவதற்காக ஹட்சிசன் டெலிகொம்யூனிகேஷன் லங்காவுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.
மிகவும் கட்டுபடியான கட்டணத் திட்டத்தினை கொண்ட குறிப்பிடத்தக்க ஏராளமான நன்மைகளுடன் வழங்குவதுடன், அத்திட்;டமானது மரணத்தின் போது இழப்பீடு கிடைக்கும் அனுகூலத்தைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களின் அடிப்படையில், ரூ. 4.50 எனும் சிறு தொகையினை தினசரி கட்டுப்பணத்தை செலுத்துவதனூடாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது தினசரி கொடுப்பனவு நன்மை மற்றும் டெங்கு பணக்கொடுப்பனவு நன்மை போன்ற பல சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஹட்ச் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவுத் திட்ட வாடிக்கையாளர்கள் தங்களது ஹட்ச் மொபைல் இணைப்புக்களில் இருந்து 226 ஐ டயல் செய்வதன் மூலம் தங்களை இதற்காக பதிவு செய்து இந்த காப்புறுதித் திட்டங்களை இலகுவான வழியில் அலியான்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
'காலத்திற்கேற்ப விரைவாக இடம்பெற்று வருகின்ற மாற்றங்களை உள்வாங்கி, எமது செயற்பாடுகள் அனைத்திலும் புத்தாக்கத்தை மையமாகக் கொண்டு செயற்படுவதை அலியான்ஸ் லங்கா தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஹட்ச் வாடிக்கையாளர்கள் தாங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளோம் என்ற நினைப்புடன் மிகுந்த மன நிம்மதியை அனுபவிப்பார்கள் என்று நம்புகிறோம். அவர்களின் வாழ்க்கையையும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையையும் பாதுகாக்க இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,' என்று அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெயலால் ஹேவாவசம் குறிப்பிட்டார்.
'இந்த திட்டத்தின் அறிமுகமானது, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ற உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கி, மிகச் சிறந்த மதிப்புள்ள உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம் என்ற ஹட்ச் நிறுவனத்தின் அர்ப்பணிப்பினை மீண்டும் ஒரு முறை காண்பித்துள்ளது. அலியான்ஸ் உடனான எங்கள் கூட்டாண்மை மூலம், ஹட்ச் வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதி மற்றும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டுபடியான கட்டணங்களுடன் காப்புறுதித் திட்டத்தை சௌகரியமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள் ஹட்ச் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அதி முக்கியமானவை. வேகமாக வளர்ந்து வரும் எங்கள் வாடிக்கையாளர் தளத்திற்கு இந்த காப்புறுதித் திட்டம் உண்மையிலேயே பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,' என்று ஹட்ச் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான ரம்ஸீனா மோர்செத் லை குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
5 hours ago