Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
Freelancer / 2023 டிசெம்பர் 29 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் விவசாயத் துறையுடன் தொடர்புடைய வர்த்தக நாமமான பவர் என அறியப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், 2018 ஆம் ஆண்டில் சுப்பர் யூரியாவை பயன்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்தது. பயன்படுத்தும் மண்ணில் அமோனியா ஆவியாதல் மற்றும் நைதரசன் உரத்தின் நைதரசனாக்கம் ஆகியவற்றை தணிக்கும் இரட்டை நைதரசன் உறுதியாக்கியாக இந்த உரம் அமைந்துள்ளது. இந்த உறுதியாக்கியினூடாக, நைதரசன் உரப் பாவனையின் வினைத்திறன் மேம்படுத்தப்படுவதுடன், நைதரசன் இழப்பை குறைத்து, விளைச்சலை மேம்படுத்தி, சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைப்பதாகவும் அமைந்துள்ளது.
அன்று முதல், புகழ்பெற்ற விவசாய நிபுணர்கள் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் நிபுணர்கள் மற்றும் இலங்கை விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் பவர் இணைந்து சுப்பர் யூரியா பயன்பாட்டை மாதிரியாக பயிர்களில் முன்னெடுத்திருந்தது. நைதரசன் உறுதியாக்கிகளின் வினைத்திறன் வெற்றிகரமாக அமைந்திருந்ததை தொடர்ந்து, மண் வகை, காலநிலை மற்றும் பயிர் வகை ஆகிய காரணிகளால் உந்துதல் அளிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்தும், சுப்பர் யூரியாவை வணிக ரீதியில் விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக பவர் அண்மையில் அறிவித்திருந்தது.
ஐக்கிய நாடுகள் சூழல் நிகழ்ச்சித் திட்டத்துடன் 2019 ஒக்டோபர் மாதம் இலங்கை ஏற்படுத்திக் கொண்ட பங்காண்மையின் பிரகாரம், வாழ்க்கைக்கான நைதரசன் எனும் கொழும்பு பிரகடனத்தை பின்பற்ற ஆரம்பித்தது. 2030ஆம் ஆண்டளவில் நைதரசன் கழிவை அரை மடங்காக குறைக்கும் வழிமுறையை 15 அங்கத்துவ நாடுகள் பின்பற்றுவது தொடர்பில் இந்த பங்காண்மையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது ஐக்கிய நாடுகள் சூழல் ஒன்றுகூடலில், புவியில் நிலைபேறான வகையில் நைதரசன் பயன்பாட்டை மேற்கொள்வது தொடர்பான “நிலைபேறான நைதரசன் முகாமைத்துவத்துக்கான உறுதிமொழி” எனும் சர்வதேச நைதரசன் நிர்வாக கட்டமைப்பு (INMS) இன் ஆதரவுடன் இலங்கை இந்த நிலைப்பாட்டை மேலும் உறுதி செய்திருந்தது.
உலகளாவிய பொருளாதார ரீதியில் நைதரசன் பாவனை என்பது சிக்கனமற்றதாக அமைந்துள்ளது. பெருமளவான பகுதி சூழலில் வெளியிடப்படுகின்றது. தற்போதைய தவறான முகாமைத்துவம் மற்றும் அளவுக்கதிகமாக நைதரசன் பயன்பாடு ஆகியன பூமி, நீர், உயிரியல் பரம்பல், மனித சுகாதாரம் மற்றும் வளி ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், மோசமான காலநிலை மாற்றங்களையும் தோற்றுவிக்கும்.
தாவரங்களினால் பயன்படுத்தக்கூடிய வகையில் நைதரசனை அம்மோனியம் முறையில் நீண்ட காலம் சேமித்து வைக்கக்கூடியதாக சுப்பர் யூரியா அமைந்துள்ளது. நைதரசன் பாவனையை வினைத்திறனாக பயன்படுத்துவதையும், நைதரசன் கசிவடையும் இடரை தணிக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது. நைதரசன் உரத்தை பயன்படுத்துவது, சூழல் தாக்கத்தை குறைப்பது மற்றும் நிலைபேறான விவசாய செயற்பாடுகளை ஊக்குவிப்பது போன்றவற்றை விவசாயிகள் மத்தியில் ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் இலங்கையில் இரசாயன உரம் மற்றும் களைநாசினிகள் பயன்பாட்டை தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை தொடர்ந்து, முன்னணி ஆய்வு நிலையங்கள் மற்றும் பரந்தளவு துறைசார் பங்காளர்களுடன் இணைந்து சிறப்பு நிலையத்தை பவர் நிறுவியுள்ளது. இலங்கையில் சேதன மற்றும் நிலைபேறான விவசாயத் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞான நிபுணத்துவ அமைப்பாக இது அறியப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago