2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடமாக ஸ்டார் காமன்ட்ஸ் தெரிவு

S.Sekar   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதாரமாக திகழ்வது மற்றும் பங்கேற்கும் வழிமுறைகள் தொடர்பில் ஊழியர்களுக்கு முக்கியத்துமளிப்பது தொடர்பில் சர்வதேச ஆடை உற்பத்தியாளரான ஸ்டார் காமன்ட்ஸ் குழுமம் காண்பிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளினூடாக, பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடங்களில் ஒன்றாக Great Place to Work® நிறுவனத்தினால் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

நம்பகத்தன்மை, நேர்மைக்கு மதிப்பளிப்பது, பெருமை போன்றவற்றுக்காக புகழ்பெற்ற Trust Index© Survey and Culture Audit© Management கருத்தாய்வின் போது ஊழியர்களின் அனுபவங்கள் பகிரப்பட்டதனை அடிப்படையாகக் கொண்டு இந்த சான்றளிப்பு ஸ்டார் காமன்ட்ஸ் குழுமத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பெறுமதிகள் நேர்த்தியானவையாகவும் உண்மையானவையாகவும் அமைந்திருப்பதாக சுமார் 90 சதவீதமான ஆய்வுப் பெறுபேறுகள் வெளிப்படுத்தியிருந்தன.

ஒவ்வொரு நபர் மத்தியிலும் பயிலல் மற்றும் வளர்ச்சியை தூண்டும் பணிச் சூழலை ஏற்படுத்தி பேணுவது என்பதில் நிறுவனம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அறிவுப் பகிர்வு என்பதில் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளது. கடந்த இரு தசாப்த காலப்பகுதியில், குழுமத்தினால் நாட்டிலுள்ள சகல தொழிற்சாலைகளிலும் 1784 பயிற்சிப் பட்டறைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இதில் 41398 சிரேஷ்ட ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.

நபர் ஒருவருக்கு வளர்ச்சியை எய்துவதற்கும் பயில்வதற்கும் பல வாய்ப்புகளை வழங்க வேண்டும் என ஸ்டார் காமன்ட்ஸ் குழுமம் கருதுவதுடன், ஊழியர்களின் மகிழ்ச்சி சுட்டெண்ணில் அதிகளவு பங்களிப்புச் செலுத்தும் காரணியாக அமைந்திருப்பதாகவும் நம்புகின்றது. ஒவ்வொரு ஊழியரிலும் இந்த விடயங்களுக்காக தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதுடன், ஸ்டார் காமன்ட்ஸ் குழுமத்தில் ஊழியர் விருத்தி என்பது பங்காண்மையாக கருதப்பட்டு, குழு அங்கத்தவர்களிடையே வளர்ச்சி தொடர்பான மனநிலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

குழுமத்தின் வருடாந்த பயிற்சி அமர்வுகளின் போது இது மிகவும் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், சராசரியாக 150 – 200 பயிற்சிகளில் சுமார் 2000 – 3000 ஊழியர்கள் அவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இதற்கு மேலதிகமாக, மேற்பார்வையாளர்களுக்காக 20 விருத்தி அமர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளின் பெறுமதியை முகாமையாளர் திறன் மேம்படுத்தல் (40சதவீதம்), தொழில்நுட்பத் திறன் மேம்படுத்தல் (25 சதவீதம்), ஊக்கமளிப்பு மற்றும் பிரத்தியேக விருத்தி (35 சதவீதம்) என வகைப்படுத்த முடியும்.

ஸ்டார் காமன்ட்ஸ் குழுமத்தைப் பொறுத்தமட்டில் தொடர்ச்சியான நிபுணத்துவ விருத்தி என்பது சொற்பதமாக மாத்திரம் அமைந்திராமல், ஊழியர்களுக்கு அடிப்படையான மற்றும் சிக்கல்கள் நிறைந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில், வளர்ந்து வரும் மற்றும் சிறந்த திறன்களையும் ஆற்றல்களையும் பெற்று அவற்றில் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான கொள்கையாகவும் தந்திரோபாயமாகவும் அமைந்துள்ளது. ஊழியர்களுக்கு வெறுமனே தம்மை வளர்த்துக் கொள்வது மாத்திரமன்றி, தம்மின் சிறந்த பெறுமதிகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.

நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கல்வி நிலையங்களினூடாக இந்த பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டங்களில் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .