Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலைபேறான ஊழியர் அனுபவங்களில் சர்வதேச தரங்களை பேணுகின்றமைக்காக, காபன் நடுநிலை சான்றிதழ் பெற்றதும், அலைவு நெளிவான பொதித் தீர்வுகள் உற்பத்தியாளருமான Ex-Pack Corrugated Cartons PLC, இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்கள் வரிசையில், சிறியளவிலான பணியிடங்கள் பிரிவில் ஐந்தாமிடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.
ஐந்தாவது தடவையாக இந்த கௌரவிப்பு Ex-Pack நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், ஊழியர் நலன் மற்றும் ஆரோக்கியமான பணியிட கலாசாரத்தை பேணுதல் போன்றவற்றில் நிறுவனம் காண்பிக்கும் முன்னுரிமையான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆசியாவில் சிறிய மற்றும் நடுத்தரளவு பிரிவில் பணியாற்றுவதற்கு சிறந்த இடங்களில் ஒன்றாகவும் Ex-Pack கௌரவிக்கப்பட்டிருந்தது.
வளர்ச்சி மற்றும் மீண்டெழுந்திறனை முன்னெடுத்துச் செல்லும் Ex-Pack இல் பணியாற்றுவோரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு கிடைத்த கௌரவிப்பாக இவை அமைந்துள்ளது. Ex-Pack Corrugated Cartons PLC இன் தவிசாளர் சத்தார் காசிம் கருத்துத் தெரிவிக்கையில், “நாம் தலைமைத்துவ அணியில் இருந்த போதிலும், எமது ஊழியர்களிடமிருந்து நாம் உத்வேகத்தைப் பெறுவதுண்டு. அத்துடன், நாம் தொடர்ந்தும் பயில்வதில் நாட்டம் காண்பிக்கும் நிறுவனமாக திகழ்கின்றோம். Ex-Pack ஐச் சேர்ந்த அனைவரும் தமது கருத்துகளை தெரிவிக்க முடியும் என்பதுடன், தனித்துவம், பிரத்தியேக வளர்ச்சி, சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை அனைவரின் மத்தியிலும் பேணும் வகையில் இயங்குகின்றோம்.” என்றார்.
களனியில் அமைந்துள்ள நவீன வசதிகள் படைத்த தொழிற்சாலையில் 300 உறுதியான பணியாளர்கள் காணப்படுவதுடன், நாட்டில் தொடர்ச்சியாக நிலவிய சிவில் யுத்தம் முதல் கொவிட் தொற்றுப் பரவல் மற்றும் பொருளாதார தளம்பல்கள் நிறைந்த நெருக்கடியான சூழல்களிலும், இவர்கள் நிறுவனத்தின் மீதான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி பணியாற்றி வருகின்றனர். அணியினர் படிப்படியாக உறுதித் தன்மையை வெளிப்படுத்தி செயலாற்றி வருகின்றனர். நிறுவனம் அனைவரினதும் கருத்துக்களுக்கும் செவிமடுக்கும் கொள்கையை பின்பற்றுவதுடன், தற்போது கொண்டுள்ள நிறுவன கலாசாரத்தில் இது மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது.
Ex-Pack தனது ஊழியர்களுக்கு தமது பிரத்தியேக மற்றும் தொழில்சார் இலக்குகளை எய்துவதற்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிப்புகளை வழங்குகின்றது. அத்துடன் பணி-வாழ்க்கை சமநிலை, உள ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான மனநிலை தொடர்பான பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் குறுகிய அமர்வுகளை முன்னெடுக்கின்றது. பெருமளவில் ஆண்கள் பணியாற்றும் துறையில் இயங்கும் Ex-Pack, பாலின சமத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளது. பாலின பாகுபாடு மற்றும் ஓரங்கட்டல் தொடர்பில் சகிப்புத்தன்மையை நிறுவனம் கொண்டிருப்பதில்லை.
Aberdeen Holdings (Pvt) Ltd இன் துணை நிறுவனமாக Ex-Pack Corrugated Cartons PLC திகழ்வதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு பொதியிடல் தீர்வுகளை வழங்குகின்றது. நிறுவனம் ISO 9001-2015, ISO 14001-2015, FSC COC, WRAP ஆகிய சான்றிதழ்களைப் பெற்றுள்ளதுடன், NCE ஏற்றுமதி விருதுகள், CNCI விருதுகள், லங்கா ஸ்டார் விருதுகள், NBE விருதுகள், லங்கா CSR விருதுகள் மற்றும் Green விருதுகள் ஆகியவற்றில் கௌரவிப்புகளைப் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago