2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பணியாற்ற சிறந்த நிறுவனங்கள் 40 வரிசையில் CBL

S.Sekar   / 2021 பெப்ரவரி 13 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் மற்றும் CBL Natural Foods பிரைவட் லிமிடெட் ஆகியன இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த 40 நிறுவனங்கள் வரிசையில் Great Place to Work® இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அத்துடன் பெண்களுக்கு பணியாற்றுவதற்கு சிறந்த 10 பணியிடங்களில் ஒன்றாக CBL Natural Foods தெரிவு செய்யப்பட்டிருந்தது. இதனூடாக பணியிடத்திலும் பெறுமதி சங்கிலித் தொடரிலும் பெண்களின் முயற்சிகளுக்கு வலுவூட்டுகின்றமைக்காக CBL Natural Foods நிறுவனம் கௌரவிக்கப்பட்டுள்ளது. 85 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் மிலேனியல் யுகத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படும் நிலையில், 2020 ஆண்டின் மிலேனியல் யுகத்தைச் சேர்ந்தவர்களுக்கான சிறந்த 10 பணியிடங்களில் CBL Exports நிறுவனமும் தரப்படுத்தப்பட்டிருந்தது.

CBL குரூப் துணை நிறுவனங்களான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட், CBL Natural Foods பிரைவட் லிமிடெட் மற்றும் CBL Exports பிரைவட் லிமிடெட் ஆகியன பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களான சான்றளிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த இந்த நிறுவனங்கள் காண்பிக்கும் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த சான்றளிப்பு அமைந்துள்ளது.

CBL குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷாமலி விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் பணிபுரிவதற்கு சிறந்த 40 நிறுவனங்கள் வரிசையில் எமது நிறுவனங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கும் மிலேனியல் யுகத்தைச் சேர்ந்தவர்களுக்குமான சிறந்த 10 பணியிடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளமையானது, பெறுமதி அடிப்படையிலான எமது வியாபாரக் கொள்கையில் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். கரிசனை, தரம், புத்தாக்கம் மற்றும் நேர்மை ஆகிய பிரதான பெறுமதிகளை வலிமைப்படுத்தும் கலாசாரத்தின் பிரகாரம் உறுதியான பெறுபேற்றைக் கட்டியெழுப்புவதில் குழுமம் எப்போதும் கவனம் செலுத்துகின்றது. இந்த இலக்குகளை எய்துவதற்கு சரியான நபர்கள், சரியான நிலைகளில் பணியாற்றுவதுடன், அவர்களுக்கு அவசியமான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.” என்றார்.

மஞ்சி, ரெவெலோ, டியாரா, சமபோஷ, நியுட்ரிலைன், சேர மற்றும் லங்காசோய் போன்ற உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக செயற்பாடுகளின் 6000 க்கும் அதிகமான ஊழியர்கள் CBL குழுமத்தில் பணியாற்றுகின்றனர். இலங்கையின் பொருளாதாரத்தில் CBL குரூப் முக்கிய பங்காற்றுவதுடன், பண்ணையிலிருந்து உணவு மேசை வரையான உணவு விநியோக பெறுமதிச் சங்கிலியின் விருத்தியிலும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .