Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2023 ஏப்ரல் 03 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபெக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி திரட்டுவதற்காக ரன் போஃ தெயார் லைவ்ஸ் 2023 (Run For Their Lives 2023) திட்டத்தில் AIA இன்ஷூரன்ஸ் பங்கேற்றிருந்ததாக அறிவித்துள்ளது. இந்த அறக்கட்டளை ஓட்டமானது இலங்கையில் தொற்றா நோய்களைத் தடுப்பதிலும் மற்றும் நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்தி மக்கள் ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன், சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு உதவும் AIA இன் வர்தக நாம நோக்குடன் இணைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தொற்றா நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் அர்ப்பணிப்பினைத் தொடர்வதோடு நாட்டிலுள்ள முன்னணி தொற்றா நோய்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
2030 ஆம் ஆண்டளவில் ஒரு பில்லியன் மக்களின் உயிர்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற AIA இன் இலக்குடன் RFTL இன் பங்கேற்பாளர்கள் நோய்களைத் தடுக்கவும், நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கவும் உதவும் ஆரோக்கிய மற்றும் நல்வாழ்வுப் பழக்கத்திற்கான உறுதிமொழியினை மேற்கொள்வதற்காக ஊக்குவிக்கப்பட்டிருந்தனர். பங்கேற்பாளர்கள் தங்கள் ஆரோக்கியமற்ற பழக்கங்களை அளவிடும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைப் பழக்கங்களைப் பரிந்துரைக்கும் நிகழ்நேரக் கணக்கெடுப்பிலும் பங்கேற்றிருந்தனர். AIA இன் ஆரோக்கிய நல்வாழ்வுப் பங்காளரான வீடா மெடிக்கல் கிளினிக் (Vida Medical Clinic) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரோக்கிய நல்வாழ்வு விளையாட்டுக்கள் மற்றும் இலவச BMI அமர்வுகளில் பங்கேற்றதற்காக பங்கேற்பாளர்களுக்கு உடனடியான வெகுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
59 minute ago
3 hours ago