Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2023 ஏப்ரல் 21 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் (பிரைவட்) லிமிடெட், தனது உற்பத்தி விரிவாக்க தந்திரோபாயத்தின் அங்கமாக, பதப்படுத்தல் ஆலையை அண்மையில் நிறுவியிருந்தது. இதனூடாக, அதிகரித்துச் செல்லும் நுகர்வோர் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில், நிறுவனத்தினால் 200 டொன்களுக்கு அதிகமான பதப்படுத்திய உணவுத் தயாரிப்புகளை தயாரிக்கக்கூடியதாக இருக்கும்.
பதப்படுத்திய உணவுத் தயாரிப்புகள் தொழிற்துறையில் படிப்படியாக பிரவேசித்த வண்ணமுள்ளன. நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் இந்த முறையை பின்பற்றுவதுடன், இலங்கையின் ready-to-eat frozen crispy meat பிரிவில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்திருந்தது.
மேலும், அண்மைய விரிவாக்க நடவடிக்கைகளினூடாக, உள்நாட்டு சந்தைக்கு மேலதிகமாக, பிரதான ஏற்றுமதி சந்தைகளுக்கும் முன்னுரிமையளித்து தனது கொள்ளளவுத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் தனது தரமான ஆரோக்கியமான கோழி இறைச்சித் தெரிவுகளை இலங்கையிலிருந்து சர்வதேச நாடுகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.
ஏற்கனவே காணப்படும் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் போன்றன அடங்கலாக, சூழலுக்கு நட்பான ஏற்பாடுகளை பின்பற்றும் வகையில், புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு உள்ளம்சங்கள் காணப்படுகின்றன. சென்ரல் யூனியனின் ISO 14064-1:2018க்கமைவான Greenhouse Gas (GHG) உறுதிப்படுத்தல் அறிக்கையை பின்பற்றும் ஒரே உற்பத்தியாளராக திகழ்கின்றமையையிட்டு நிறுவனம் பெருமை கொள்கின்றது.
தனது கோழி வளர்ப்பு செயற்பாடுகளை விரிவாக்கம் செய்வதிலும் நியு அந்தனீஸ் பார்ம்ஸ் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. இதன் அங்கமாக, அண்மையில் புகழ்பெற்ற கோழித் தீன் உற்பத்தியாளர்களான Gold Coin Feed Mills (Lanka) Ltd ஐயும் கையகப்படுத்தியிருந்தது.
தனது பசுமையான கோழி இறைச்சி கொள்கை, நிலைபேறாண்மை போன்றவற்றுக்காக புகழ்பெற்றுள்ளதுடன், தனது பெறுமதிகளில் அதிகளவு அக்கறை கொண்டுள்ளது.
தனது விநியோக சங்கிலி ஆற்றல்களை வலிமைப்படுத்துவதற்கு மேலாக, நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் நுகர்வோர் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளையும் முன்னெடுத்த வண்ணமுள்ளது. நாடு முழுவதிலும் இலவச விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கும் “தொரகடபலிய” என்பதை அறிமுகம் செய்திருந்ததுடன், Meatlery எனும் வர்த்தக நாமத்தின் கீழ் விற்பனை சங்கிலித் தொடர்களையும் அறிமுகம் செய்திருந்தது. அமெரிக்காவின் தேசிய கோழி இறைச்சி சம்மேளனத்தின் நியமங்களை பின்பற்றுகின்றது. GMP, HACCP, ISO 22000, உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹலால் சான்றிதழ்கள் போன்ற தரப்படுத்தல் சான்றுகளையும் நிறுவனம் பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
3 hours ago