Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2023 ஏப்ரல் 03 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, அண்மையில், இலங்கை சந்தைப்படுத்தல் பட்டதாரிகளுக்கான சர்வதேச சம்மேளனத்துடன் (AIMG) கூட்டாண்மை பங்காண்மை உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அதனூடாக, தனது சந்தை சென்றடைவு மற்றும் சிறந்த நிபுணத்துவச் சிறப்பு ஆகியவற்றை எய்துவதற்கு எதிர்பார்த்துள்ளது.
AIMG மற்றும் SLT-MOBITEL இடையிலான பங்காண்மையினூடாக, இரு நிறுவனங்களுக்கும் பரஸ்பர அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என கருதப்படுவதுடன், தொழிற்துறையின் முன்னிலைக்கு இரு வேறுபட்ட ஜாம்பவான்களை முன்கொண்டு வந்து, தமது உறுதியான ஸ்தானத்தை மேலும் வலிமைப்படுத்த முன்வந்துள்ளன.
இந்தப் பங்காண்மை தொடர்பில் SLT-MOBITEL இன் குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய முன்னோடி எனும் வகையில், சிறந்த பங்காண்மைகளினூடாக எமது நோக்கத்தை சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என நாம் கருதுகின்றோம். அந்த வகையில் இந்தப் பங்காண்மையினூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் பெற்றுக் கொடுக்கும் சேவைகள் மேலும் வலிமைப்படுத்தப்படும் எனக் கருதுகின்றோம். எனவே, AIMG போன்ற நிபுணத்துவ சந்தைப்படுத்தல் சம்மேளனத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், இந்தப் பங்காண்மையினூடாக எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர் வலையமைப்பை மேலும் வலிமைப்படுத்திக் கொள்வதற்கு சிறந்த வாய்ப்புக் கிடைக்கும் எனவும் கருதுகின்றோம்.” என்றார்.
SLT-MOBITEL என்பது தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) தீர்வுகள் வழங்குநராகத் திகழ்வதுடன், 165 வருட காலத்துக்கும் மேலாக முன்னணி நிலையான இணைப்பு, மொபைல் புரோட்பான்ட் மற்றும் ஆதார உட்கட்டமைப்பு சேவைகள் வழங்குநராகவும் திகழ்கின்றது. SLT-MOBITEL இனால் நுகர்வோரின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் வகையிலான குரல், டேட்டா, புரோட்பான்ட், மொத்த, என்டர்பிரைஸ், க்ளவுட், சர்வதேசம் மற்றும் IPTV அடங்கலான சேவைகள் மற்றும் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. SLT-MOBITEL வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு இணைப்புத் தீர்வுகளான Fibre, ADSL மற்றும் 4G LTE போன்ற இணைப்புத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடிவதுடன், நுகர்வோர் சேவைகளான PeoTV மற்றும் eChanneling போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளலாம். நிறுவனத்தினால் மனித வளங்கள் தீர்வுகள், தொலைபேசி விபரக்கொத்து சேவைகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தீர்வுகள் மற்றும் தொழிற்கல்வி சேவைகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன.
புதிய கைகோர்ப்பு தொடர்பாக AIMG ஸ்ரீ லங்காவின் தவிசாளர் சுஜித் சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது கூட்டாண்மைப் பங்காளராக SLT-MOBITEL ஐ கொண்டிருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றோம். வியாபார மற்றும் சந்தைப்படுத்தல் சமூகத்தினுள் நிபுணத்துவ சிறப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் கிடைத்திருந்த ஆதரவு தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். SLT-MOBITEL இன் தொடர்ச்சியான ஆதரவுடன், இலங்கையில் AIMG மற்றும் அதன் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேம்படுத்தும் வகையில் இயங்கக்கூடியதாக இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்த முன்னோடிகளால், மூன்று தசாப்த காலத்துக்கும் அதிகமான அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைக் கொண்டு, 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இலங்கை சந்தைப்படுத்தல் பட்டதாரிகளுக்கான சர்வதேச சம்மேளனம் (AIMG) நிறுவப்பட்டிருந்தது.
AIMG இன் பிரதான இலக்கு என்பது, சர்வதேச சந்தைப்படுத்தல் தகைமைகளுடன் சிறந்த மற்றும் நிபுணத்துவமான பிணைப்பை ஏற்படுத்தி, இளம் மற்றும் சிரேஷ்ட அங்கத்தவர்களுக்கு அறிவுப் பகிர்வுக்காக பயிற்சிப்பட்டறைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பல்வேறு இதர செயற்பாடுகளுக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இலங்கையை தளமாகக் கொண்ட சந்தைப்படுத்துநர்களுக்கு தமது தொழிலிலும், சந்தையிலும் முன்னிலையில் திகழ்வதற்கு ஆதரவளிக்கவும் AIMG எதிர்பார்க்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
3 hours ago