2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

நியு அந்தனீஸ் குரூப் தீனி வியாபாரத்துக்கு ISO 22000:2018 சான்றிதழ்

Freelancer   / 2024 நவம்பர் 01 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியு அந்தனீஸ் குரூப் அண்மையில் தனது தீனி வியாபாரத்துக்கு ISO 22000:2018 சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. உயர் தரம் வாய்ந்த, பாதுகாப்பான மற்றும் நிலைபேறான தீனி தீர்வுகளை இலங்கையின் கோழி இறைச்சி உற்பத்தி துறைக்கு பெற்றுக் கொடுப்பதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த சான்றிதழ் அமைந்துள்ளது.

நியு அந்தனீஸ் ஃபீட்ஸ் நிறுவனத்துக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், உயர் தரம் வாய்ந்த சர்வதேச நியமங்களை பின்பற்றி, தனது தீனி தயாரிப்புகள் கோழிகளின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது மாத்திரமன்றி, நிலைபேறான மற்றும் சூழலுக்கு நட்பான பண்ணை செயன்முறைகளுக்கு பங்களிப்பு வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.

2022 ஆம் ஆண்டில் நாட்டின் நீண்ட காலமாக இயங்கிய புகழ்பெற்ற உயர் தரம் வாய்ந்த தீனி உற்பத்தியாளரான கோல்ட் கொய்ன் ஃபீட்ஸ் மில்ஸ் (லங்கா) லிமிடெட்டை மூலோபாய ரீதியில் கையகப்படுத்தியிருந்ததைத் தொடர்ந்து, நிறுவனத்தின் ஒன்றிணைந்த கோழி இறைச்சி வியாபாரத்தின் உள்ளக அங்கமாக நியு அந்தனீஸ் ஃபீட்ஸ் அமைந்துள்ளது. இந்த ஒன்றிணைப்பினூடாக, கோழி இறைச்சி பெறுமதி சங்கிலியில் பரந்தளவு, பரிபூரண தயாரிப்பு மற்றும் தீர்வு தெரிவுகளை பெற்றுக் கொடுக்கும் குழுமத்தின் ஆற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பண்ணையிலிருந்து முள்ளுக்கரண்டி வரை அவர்களின் விநியோக சங்கிலியில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளும் உறுதி செய்யப்படுகின்றது.

நியு அந்தனீஸ் குரூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர இந்த சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ISO 22000:2018 சான்றிதழை பெற்றுக் கொள்வது என்பது தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உயர் நியமங்களை பேணுவதில் எமது அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எமது கோழி இறைச்சி தயாரிப்புகளில் மாத்திரமன்றி, தொழிற்துறைக்கு நாம் வழங்கும் அத்தியாவசிய தீனிகளிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தைக்கு முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட, சூழலுக்கு நட்பான கோழி இறைச்சி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் சிறந்த நிலையில் திகழ்கின்றோம்.” என்றார்.

நியு அந்தனீஸ் ஃபீட் வியாபாரம் என்பது அண்மைய மாதங்களில் பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை போன்றன தொடர்பில் கவனம் செலுத்தி, சூழலுக்கு நட்பான மற்றும் அன்ரிபயோட்டிக் இல்லாத கோழி இறைச்சி உற்பத்திக்கு, தனது பசுமையான பெறுமதிகளை பின்பற்றும் தீனிகளை வழங்குகின்றது. ISO 22000:2018 ஊடாக, இந்த வாக்குறுதி மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் FSSC 22000 சான்றிதழைப் பெற்ற முதலாவது கோழி இறைச்சி உற்பத்தியாளர் எனும் வகையில், நியு அந்தனீஸ் குரூப், தொடர்ந்தும் தொழில்துறையில் முன்னோடியாக திகழ்ந்து, தீனி மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் பிராந்தியத்தில் நியமங்களை பதிவு செய்த வண்ணமுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X