2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டுகிறது பிரிட்டிஷ் கவுன்சில் இளம்

Gavitha   / 2020 நவம்பர் 12 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள், இளைஞர்களுக்கு பொருளாதார வலுவூட்டலை உறுதி செய்யும் நோக்குடனும், அவர்களை வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாக மாற்றியமைக்கும் வகையிலும், இலங்கையின் பிரிட்டிஷ் கவுன்சில் தனது என்டர்பிரைஸ் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக, இளைஞர்கள்,பெண்களுக்கு தமது சமூகங்களில் அவசியமான சமூக மாற்றத்தை ஏற்படுத்த அவசியமான திறன்கள் மற்றும் அறிவூட்டல்களை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில், CARE Deutschland-Luxemburg (CARE DL), Chrysalis ஆகியவற்றுடன் பங்காண்மையில் என்டர்பிரைஸ் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனூடாக, ஊவா, மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்களுக்கு அவசியமான திறன் விருத்தி, ஆலோசனை, பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஐக்கிய இராஜ்ஜியத்தின் நிபுணர்களின் உதவியுடன், சமூக தொழில்முயற்சித் துறையை கட்டியெழுப்புவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பதுளை, மொனராகலை, மாத்தளை , நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த பின்தங்கிய சமூக தொழில் முயற்சியாளர்களை தயார்ப்படுத்துவது ஆகியன பிரிட்டிஷ் கவுன்சிலின் பங்காக அமைந்துள்ளது. 

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், Active Citizens Social Enterprise Leadership நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை முக்கிய அங்கம் பெறுகின்றது. இந்த கற்கையினூடாக, கலாசாரங்களுக்கிடையிலான உரையாடல்கள் மற்றும் சமூகத் தலைமைத்துவத்திலான அபிவிருத்தி ஆகியன சமூக தலைமைத்துவ திறன்களினூடாக ஆலோசனை வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டிருந்தன. 12 மாத காலப்பகுதியில், ஐந்து நாள் திறன் கட்டியெழுப்பல் பயிற்சிப் பட்டறைகள் 24 முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இதில் 628 பங்குபற்றுநர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலை பூர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கவுன்சில் தனது Business and Investment Readiness programme (BiR) நிலை 1 க்காக 188 பங்குபற்றுநர்களை தெரிவு செய்திருந்தது. ஆர்வம் மிக்க சமூக தொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பணியில் தாக்கத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு அவசியமான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், தமது நிறுவனங்களை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு அவசியமான தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் அனுகூலங்கள் தொடர்பாக பிபில, யல்கும்புர பகுதியைச் சேர்ந்த எஸ்.எம். பிரேமதாச குறிப்பிடுகையில், “11 வருடங்களுக்கு மேலாக நான் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும், சமூகத்துக்கு சேவை வழங்குவது என்பது தொடர்பில் நான் தெளிவான புரிந்துணர்வை கொண்டிருக்கவில்லை. இந்த பயிற்சியினூடாக, எனக்கு சமூகத்துக்கு சேவையாற்ற பயில முடிந்ததுடன், எனது நிறுவனத்துக்கு சமூக அடிப்படையிலான நோக்கத்தை உருவாக்கிக் கொள்ளவும் உதவியிருந்தது” என்றார்.                                                       

BiR நிகழ்ச்சியின் நிலை 2 இன் போது, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 55 சமூக தொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒரு வருட சமூக செயற்திட்டத்துக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்ததுடன், அதனூடாக சமூக தொழில் முயற்சியாளர்களை தெளிவான, சமூக நோக்கு மற்றும் தன்னேற்புத்திட்டத்துடன் மாற்றியமைப்பது இலக்குகளாக அமைந்துள்ளன.

பிரிட்டிஷ் கவுன்சில் நிகழ்ச்சிகளுக்கான தலைமை அதிகாரி சஞ்ஜீவனி முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த சிறு, நடுத்தரளவு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் பொதுவான பிரச்சனைகளைக் கொண்டுள்ளனர். பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தமது வினைத்திறனை மேம்படுத்திக் கொள்ளல் மற்றும் பணியாற்றும் சூழலில் தாக்கத்தை மேம்படுத்தி, சமூக தொழில்முயற்சியாளர்களாக உருவாக உதவும் வகையில் எமது நிகழ்ச்சித்திட்டம் அமைந்துள்ளது” என்றார். 

ஊடக தொடர்புகளுக்கு:

Manisha Amerasinghe

Manager Marketing and Communications

T + (94) 772 521 539   Email- manisha.amerasinghe@britishcouncil.org


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .