2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக AIA இன்ஷுரன்ஸ் கௌரவிப்பு

S.Sekar   / 2021 மார்ச் 15 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

AIA இன்ஷுரன்ஸ் தொடர்ச்சியாக எட்டாவது வருடமாகவும் இலங்கையில் பணிபுரிவதற்கான மிகச்சிறந்த இடம் (Great Place to Work®) விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தொடர்ச்சியான மூன்றாவது வருடத்திலும் 'பெண்கள் பணிசெய்வதற்கான மிகச்சிறந்த இடமாகவும்' நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

2020 இற்காக AIA, பணிபுரிவதற்கான மிகச்சிறந்த இடம் (Great Place to Work®) நம்பிக்கைச் சுட்டெண் (Trust Index©) மதிப்பாய்வு மற்றும் நிறுவனக் கலாசாரக் கணக்காய்வு (Culture Audit©) வினாக்கொத்து ஆகியவற்றின் பெறுபேறுகளின் பகுப்பாய்வுகளினூடாக மிகவும் கடினமான அளவீடுகளில் சித்தியெத்தியுள்ளதுடன், நாட்டிலுள்ள நிறுவனங்கள் மத்தியில் மிகச்சிறந்த புள்ளியைப் பெற்றுள்ளதன் காரணத்தினால் சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் வெற்றி பெற்றிருக்கின்றது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக ஊழியர்களின் ஈடுபாட்டிற்கு 2020 ஆம் ஆண்டு பெரும் சவால்மிக்கதொரு வருடமாக அமைந்திருந்தது. ஊழியர்களுக்கு உதவி செய்யும் விதமாக, அவர்கள் தொடர்ந்தும் பணிசெய்வதனை உறுதிப்படுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் மிகவும் சுமுகமாக வீட்டிலிருந்தே பணியினை மேற்கொள்வதற்கான அமைப்பினை குறிப்பிடத்தக்க வகையில் AIA அவர்களுக்கு ஏற்படுத்தியுமிருந்தது. வீட்டிலிருந்து பணி செய்யும் போது பணி மற்றும் வாழ்க்கைக்கான சமநிலையினை எய்தும் வகையில் மனந்தெளிநிலை மற்றும் தியானம் தொடர்பான மிகவும் பயனுள்ள அமர்வுகளுடன் ஊழியர்களை ஈடுபடுத்துவதற்காக MS Teams மற்றும் Facebook live போன்ற நிகழ்நிலை (ஒன்லைன்) தளங்களையே AIA பயன்படுத்தியிருந்தது. நிறுவனத்திற்கான ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு போன்றவற்றிற்காக அவர்களைப் பாராட்டிக் கொண்டாடுவதற்கு நிறுவனத்தினுடைய முதலாவது டிஜிடல் மாநாட்டினையும் மிகவும் வெற்றிகரமாகவே AIA ஏற்பாடு செய்திருந்தது.  எவ்வாறாயினும் நிறுவனம் தமிழ், சிங்கள புதுவருடக் கொண்டாட்டங்களை மறந்துவிடவில்லை, உண்மையில் இது நிறுவனத்தின் நாட்காட்டியில் பொதுவாக ஒருபோதும் மறக்க முடியாத, மகிழ்ச்சிக்குரியதொரு நாளாகவே இருந்து கொண்டிருக்கின்றது. இக்கொண்டாட்டம் Teams ஊடாக இடம்பெற்றிருந்ததுடன், ஊழியர்களும் மற்றும் அவர்களின் குடும்பங்களும் இதில் பங்குபற்றியிருந்ததோடு, சிறுவர்களுக்கு அழகுப் போட்டிகள் மற்றும் ஆடை அணிகலன் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு உத்தரவுகளினால் தடைகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் வருடம் முழுவதும் தங்களது ஊழியர்களைத் தொடர்ந்து மிகவும் ஊக்கமுடனும், மற்றும் பணிச்சூழல் நிலையிலும் AIA இனால் வைத்திருக்கவும் முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .