2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தேசிய தகவல், தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப விருதுகள் 2024 இல் ComBank Digital தங்க விருதை வென்றது

Freelancer   / 2024 டிசெம்பர் 20 , மு.ப. 04:36 - 0     - 31

கொமர்ஷல் வங்கி, 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தகவல், தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப (ICT) விருதுகள் நிகழ்வில் தேசிய சிறந்த தர மென்பொருள் விருதுகளில் (NBQSA), விருப்பத்துக்குரிய தங்க விருதை வென்றுள்ளது.

கொமர்ஷல் வங்கியானது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் (SME) மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வங்கியின் முதன்மையான டிஜிட்டல் பிரிவான ComBank Digital க்காக மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த 'வங்கியியல், காப்புறுதி மற்றும் நிதி நுகர்வோர்' பிரிவில் தங்கத்தை வென்றுள்ளது.

மேலும் வங்கியானது அதே பிரிவில் உள்ளக வலையமைப்பில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க 3,000 க்கும் மேற்பட்ட வங்கிக்கிளைகளின் ஊழியர்களுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கு தளமான Jimi GPT க்காக தகுதிகாண் (Merit) விருதை பெற்றுள்ளது.

ComBank Digital வென்றுள்ள விருது குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி சுமுது குணவர்தன, 'இந்த தேசிய ICT விருதை வென்றது, சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் ComBank Digital இன் வெற்றிக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும். எங்கள் செயலியானது (app) இணையற்ற வசதியையும் பாதுகாப்பையும் வழங்குவதுடன் வாடிக்கையாளர்கள் அவர்களின் நிதியினை எளிதாக கையாள்வதற்கான வழிமுறையை வழங்குகிறது. இந்த அங்கீகாரமானது, கொமர்ஷல் வங்கியில் டிஜிட்டல் வங்கிச் சேவைக்கான புதிய தரங்களை அமைப்பதற்கும் தொடர்ச்சியாக புதுமைகளை உருவாக்குவதற்கும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சிறந்த சாத்தியமான அம்சங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கும் ஊக்குவிப்பினை வழங்குகிறது. எங்களது 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களை தளத்திற்கு வரவேற்க உள்ள நிலையில் இவ்விருதானது மிகவும் உற்சாகத்தை தருகிறது. இது எங்கள் பயணத்தின் உண்மையான மைல்கல் ஆகும்.

இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் வங்கித் தளமான ComBank Digital ஒரு மாதத்திற்கு 5 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. இதற்கு பொறுப்பாக இணைய செயலி மற்றும் மூன்று சொந்த மொபைல் செயலிகள் (ios, Android மற்றும் Huawei) மூலம் வழங்கப்படும் ComBank Digital ஆனது, மேசை கணினிகள், மடி கணினிகள், டேப்கள் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற அனைத்து சாதனங்களிலும் அணுகக் கூடியதாக உள்ளதுடன் வங்கித் தேவைகள், செல்வ முதலீடு, பணம் செலுத்துதல் மற்றும் வாழ்க்கை முறை போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியதாக உள்ளது.

இந்நிலையில், 'Jimi GPT' க்கு வழங்கப்பட்டுள்ள இந்த தகுதிகாண் விருதானது, 'Gen Z' வங்கியாளருக்கான பணிச் சூழலை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் அறிவின் பங்கை அங்கீகரிக்கிறது, அதே வேளை செயல்பாட்டு திறன், தகவல்கள் துல்லியமாக வழங்கப்படுவதையும் அதன் வேகத்தையும் மேம்படுத்துகிறது. அத்துடன் ‘Jimi GPT’ ஆனது வங்கிக் கிளை ஊழியர்கள், தகவல்களை அணுகுவதற்கான நேரத்தை வெறும் 30 வினாடிகளாக குறைக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X