Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 12 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியேஷ் (Tiesh), இன் துணை நிறுவனமான Pure Gold by Tiesh இன் கீழ் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட (filigree) தொகுப்பை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது ஐரோப்பா, இத்தாலி, துருக்கி, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர நகைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இத்தொகுப்பில் இத்தாலிய 18 கெரட் நகைகள் மற்றும் முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட 22 கெரட் தங்கத் துண்டுகளும் அடங்கியுள்ளன.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நவீன வடிவமைப்புகளைக் கொண்ட filigree நகைத் தொகுப்பானது நேர்த்தியான, பாரம்பரியமான, உயிர்ப்புமிக்க தன்மையை வெளிப்படுத்தும் ஈர்க்கக்கூடிய காதணிகள், நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் கவர்ச்சிகரமான தயாரிப்புகளை கொண்டுள்ளன. மூவர்ணம், இளஞ்சிவப்பு தங்கம், வெள்ளைத் தங்கம், மஞ்சள் தங்கம் ஆகிய வண்ணங்களில், Pure Gold by Tiesh தொகுப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக திருமண பருவகாலங்களுக்கு ஏற்றவகையில், அதன் ஒவ்வொரு அம்சமும் நேர்த்தியாக, மிகக் கவனமாக இந்தத் தொகுப்பை Tiesh தொகுத்துள்ளது. இலங்கையின் நடிகையான யெஹாலி டாஷியா காளிதாச, Tiesh வர்த்தக நாம தூதுவராக திகழ்கின்றார்.
இந்த வர்த்தக நாமத்தின் விசேடத்துவம் பற்றி கருத்துத் தெரிவித்த நிறுவனத்தின் பணிப்பாளர் தியாஷா டி பொன்சேகா, "ஏனைய மணப்பெண் நகைகளிலிருந்து எமது நகைகள் தனித்துவமாக நிற்கின்றன. வடிவமைப்பு முதல் தரம் மற்றும் கைவினைத்திறன் வரை அனைத்து அம்சங்களிலும் நாம் ஆழமாக கவனம் செலுத்துகிறோம். எமது வாடிக்கையாளர்கள் எமது நகை தொகுப்புகளில் அதிக நம்பிக்கையையும் திருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளதோடு, எமது தொகுப்புகள் பல முன்னணி நகைக்கடைகளின் தொகுப்புகளை விட உயர்ந்தவையாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்." என்றார்.
புதிய filigree வடிவமைப்பு தொகுப்பானது, நேர்த்தியான வகைகளாக உள்ள நவீன வடிவமைப்புகளின் நுட்பம் மற்றும் காலத்தால் அழியாத கவர்ச்சியை வெளிப்படுத்துகிறது. மாற்றமுறும் நகைகளைச் சேர்ப்பதன் மூலம் Tiesh இன் தொகுப்பு ஒரு புதுமையான கவர்ச்சியை பெறுவதோடு, இது ஏனைய நகைகளிலிருந்து அதனை வேறுபடுத்துகிறது. Tiesh இன் ஒவ்வொரு நகையும் பாரம்பரியம் மற்றும் நவீன போக்கின் கூறுகளின் கலவையாகும். இது வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்க வாய்ப்பளிக்கிறது. இந்த பிரத்தியேக தன்மையானது, இவ்வர்த்தகநாமத்தை அதன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு, அது வடிவமைப்பு விபரங்களில் கவனம் செலுத்துவதானது, ஒவ்வொரு வடிவமைப்பிற்கும் நவீன ஆடம்பரத்தை சேர்க்கிறது.
"உங்களுக்குப் பிடித்த கைக்கடிகாரத்துடன் அழகாக இணைத்து அணியவும், ஒரு ஜோடி பாரம்பரிய வளையல்களாக அணியவும் அல்லது மிகவும் நுட்பமான தோற்றத்தை காண்பிக்கும் வகையில் தனியாக அணியவும் என, எந்தவொரு தோற்றத்திற்கும் ஏற்ற வகையில் அணிவதற்கான வடிவமைப்புகளின் தொகுப்பை வழங்குவதையே நாம் விரும்புகிறோம்." என தியாஷா மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago