Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 13 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகளை வழங்குவதற்கான ஒரு புதிய முதல் முயற்சியை ஆரம்பித்துள்ளது. அதனூடாக, டிஜிட்டல் வங்கியியலை, நிதி ரீதியாக பலனளிக்கும் வங்கியியலாக மாறியுள்ளது.
‘ComBank Digital’ ஊடாக ஏதேனும் பயன்பாட்டு கட்டணத்தை செலுத்தும் செயல்முறைக்கும், தற்போது வங்கியின் ‘Max Rewards’ திட்டத்தின் மூலம் வெகுமதி புள்ளிகளைப் பெற முடியும் என்று வங்கி அறிவித்துள்ளது. இத்திட்டமானது இதுவரை கடனட்டை அல்லது டெபிட் அட்டை மூலம் செலுத்தப்படும் கொள்வனவுகளுக்கு மட்டுமே அமுலில் இருந்தது.
வங்கியின் ஒற்றை சர்வ-ஊடக டிஜிட்டல் வங்கியியல் தளமான கொம்பாங்க் டிஜிட்டல் (ComBank Digital) ஆனது அனைத்து புதிய பதிவுதாரர்களையும், தற்போதைய பயனர்களையும் உள்ளடக்கிய Max Rewards மூலம் ஒரு பரிவர்த்தனைக்கு 500 புள்ளிகள் வரை வழங்கப்படும், இது கொள்வனவு செய்தல் அல்லது பிற நன்மைகளுக்காகப் பெறக்கூடிய புள்ளிகளைக் குவிக்க பயனர்களுக்கு உதவுகிறது.
கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கியியலின் உதவிப் பொது முகாமையாளர் பிரதீப் பந்துவன்ச கருத்துத் தெரிவிக்கையில், 'கொம்பாங்க் டிஜிட்டல் பயனர்களுக்கான Max Rewards புள்ளிகள் திட்டம் எங்கள் வாடிக்கையாளர்களின் நலன்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.' இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஏற்கனவே கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டலைப் பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வங்கி அனுபவத்தை மிகவும் பலனளிக்கும் மற்றும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
கொம் பாங்க் டிஜிட்டல் என்பது கொமர்ஷல் வங்கியின் அனைத்து இணையத்தள மற்றும் மொபைல் வங்கியியல் பிரிவுகளின் ஒருங்கிணைப்பாகும், மேலும் இது டெஸ்க்டாப் கணினிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற அனைத்து சாதனங்களிலும் அணுகலைச் செயல்படுத்தும் வகையில் பதிலளிக்கக்கூடிய இணைய பயன்பாடு மற்றும் மூன்று மொபைல் பயன்பாடுகள் (iOS, Android மற்றும் Huawei) மூலம் வழங்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago