Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
J.A. George / 2024 ஜனவரி 16 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதன்முதலில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் லொட்டரி தளமான WIN WAY இலங்கை லொட்டரி வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்துகிறது.
அரசாங்கத்தின டிஜிட்டல் மயமாக்கலுக்கான முதல்முயற்சியின் ஒரு பகுதியாக, முதன்முதலில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் லொட்டரி தளமான WIN WAY இலங்கை லொத்தர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது. இது இலங்கை வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, WIN WAY மொபைல் செயலி, வாடிக்கையாளர் இணையதளமான www.winway.lk, Dial 884 சேவை மூலம் பயனாளர்களுக்கு நடப்பு அம்சங்கள் மற்றும் அணுகல்தன்மை மாதிரியான வசதிகளை வழங்குகிறது.
தேசிய லொத்தர் சபையின் (NLB) தலைவர் கலாநிதி சமிர யாப்பா அபேவர்தன மற்றும் கெபிடல் குழுமத்தின் தலைவர், கெபிடல் குறூப் எலெக்ஸ் லொவலியினதும் MBE தலைவரினதும் பங்குபற்றுதலுடன் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட WIN WAY தள வெளியீடு 2023 நவம்பர் மாதம் 23ம் திகதி நடைபெற்றது. நாட்டின் இரண்டு சிறந்த மென்பொருள் நிறுவனங்களான திங்க்கியூப் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் கியூப்மெட்ரிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாக இது காணப்படுகிறது.
இலங்கையில் தேசிய சமூக நல நிதியத்திற்கு முன்னணி பங்களிப்பாளராகவும், நாட்டின் தேசிய அபிவிருத்தியின் மிகப்பெரிய நிதி சேகரிப்பாளர்களில் ஒருவராகவும் தேசிய லொத்தர் சபை பலவிதமான மற்றும் லொட்டரிகளை அதிக எண்ணிக்கையிலும் ஒவ்வொரு பிரிவிலும் தினசரி வெற்றிகளை முறையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு, கல்வி, மின்சார சபை, சுகாதாரத் தகவல் மற்றும் இன்போடெயின்மென்ட் ஆகிய துறைகளில் திங்க்கியூப் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், கியூப்மெய்ரிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் கெபிடல் குரூப் ஆகிய மூன்றும் முக்கிய நிறுவனங்கள். இவற்றுக்கு இடையேயான கூட்டு அனுபவத்தில் பல்வேறு அரச, பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான தேசிய மற்றும் சர்வதேச மென்பொருளை உருவாக்குவது இவற்றின் நோக்கமாகும்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கையாள்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை சமாளித்துக் கொண்டு திங்க்கியூப் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இந்த அதிநவீன டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது காகித நுகர்வையும் மற்றும் உற்பத்தியையும் குறைக்கிறது .விநியோக செலவுகளையும் இது குறைக்கிறது.
அதேவேளை லொட்டரி முகாமைத்துவ செயல்முறையையும் மேம்படுத்துகிறது. கடந்த காலத்தில், கணிசமான அளவு பணம் உரிமை கோரப்படாமல் போய்விட்டது அவை treasury க்கு மீள பெற்றப்பட்டது. இந்த தளம் வெற்றியாளர்களுக்கு சுமூகமான உரிமைகோரல் செயல் முறைகளை வழங்குவதை உறுதி செய்யும்.
WIN WAY தளம் என்பது டிஜிட்டல் லொட்டரி தளத்தின் நடத்தை அம்சத்தைப் புரிந்துகொள்வதற்கான தீவிர முயற்சியின் விளைவாகும். மேலும் அது எந்தவொரு லொட்டரி முறைமையாயினும் - இணையதளங்கள், டயல்-அப் சேவைகள் மற்றும் மொபைல் ஆப்ஸ் போன்ற எதையும் சிறப்பாகச் செயல்படுத்தும்.
தற்போதுள்ள லொட்டரி மேடையின் பாவனையாளர்கள் மற்றும் புதிதாக வருபவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையிலான அம்சங்கள் சிந்தனையுடன் நட்புடனான முறையில் வடிவமைக்கப்பட்டு அதனை அனுபவிக்க வழியமைத்துள்ளது. அதற்கும் மேலதிகமாக இந்த தளத்தை, தேசிய அடையாள அட்டை, மொபைல் சாதனம் மற்றும் இணைய இணைப்பு உள்ள எவரும் அணுக முடியும். அத்தோடு அனைத்து தரப்பு மக்களும் டிஜிட்டல் லொட்டரி அனுபவத்தில் பங்கேற்க இது அனுமதிக்கிறது.
NLB மற்றும் WIN WAY கூட்டுடன், அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் கடுமையான விதிமுறைகள் ஊடாக அனைத்து லொட்டரிகளும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படுவதை இது உறுதி செய்கிறது.
இந்த புதுமையான பாதுகாப்பான தளம் அதன் அணுகல் மற்றும் பங்கேற்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், இறுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் தேசிய பொருளாதாரம் ஆகிய இரண்டும் பயனடைய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய லொட்டரிகள் சபை இன்று WIN WAY தளத்தை அறிமுகப்படுத்த ஒரு மாபெரும் நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இலங்கையில் லொத்தர் சீட்டு விநியோகத்தில் புரட்சியை ஏற்படுத்தும். தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் நடத்தை நுண்ணறிவு போன்றவற்றை கவனத்தில் கொண்டு WIN WAY யானது லொட்டரிகளின் நிலப்பரப்பை மாற்றுவதாகவும, பண்படுத்தப்படாத மற்றும் அதிக பார்வையாளர்களுக்கு புதிய வழிகளைத் திறந்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago