Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
J.A. George / 2020 நவம்பர் 04 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் ஆசிஆட்டா மற்றும் ‘மனுசத் தெரண’ பங்குடமையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தக்க சமயங்களில் தேசத்திற்கு சேவை செய்வதில் டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளின் மற்றுமொரு அங்கமாக இலங்கையின் முன்னணி தொலைதொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா, தெரண தொலைக்காட்சி அலைவரிசையுடன் இணைந்து ‘டயலொக் உடன் மனுசத் தெரண” முயற்சியின் 2 வது கட்டத்தை ஆரம்பித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க அரசாங்க சுகாதார அதிகாரிகளின் ஆணைப்படி சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் பிரகாரம் உலர் உணவுப் பொருட்களின் கொள்வனவு, பொதியிடல் மற்றும் விநியோக நடவடிக்கைகளின் முழு செயல்முறைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த உதவி வழங்கல் முயற்சியானது, நாட்டில் கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவிய காலகட்டத்தில் இலங்கை மக்களின் நலனுக்கு இடமளிக்கும் நோக்குடன் டயலொக் ஏற்பாடு செய்த இதே போன்ற முயற்சிகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
டயலொக் உடன் மனுசத் தெரண’ ‘டயலொக் உடன் சிரச லெகதுகம” டயலொக் உடன் ITN மனுசத்வயே சத்காரய’ மற்றும் ‘வசந்தம் டிவி /எஃப்.எம் மனித நேயப்பணி உடன் டயலொக்’ போன்ற உதவி முயற்சிகளின் கீழ் நாட்டில் 22 மாவட்டங்கள் மத்தியில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் 128,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு சுமார் 6 வாரங்களுக்கான தினசரி உலர் உணவுப் பொதிகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.
தான் செயல்படும் சமூகங்கள் மீது அக்கறை கொண்ட ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில், சமூகங்களுக்கு மிகவும் உதவி தேவைப்படும் இக்கட்டான காலகட்டங்களில் ஒரே தேசமாக ஒன்றுபட்டு கொவிட்-19 தொற்றுநோய் நிலைமையைச் சமாளிக்கும் கூட்டு முயற்சியை வலுப்படுத்துவதற்கும் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் டயலொக் ஆசிஆட்டா மேற்கொண்டு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
9 minute ago
24 minute ago
34 minute ago