Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 16 , மு.ப. 08:17 - 0 - 105
எல்லா வெற்றிகளுக்கு பின்னாலும் சோகக்கதைகள் உள்ளன. விழுந்தும் பின்னடைந்தும் மன உறுதியோடு எழுந்து வந்த பயணத்தின் உச்சமாக வெற்றியை அடைந்த பின்னரே உலகம் அறிந்து கொள்கிறது. இது போன்ற ஒரு வெற்றியை, அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தங்கக் கோப்பை கரப்பந்தாட்ட போட்டியில் 2ஆம் இடத்தை பெண் பிள்ளைகள் துணிகரமாக எய்தியிருந்தனர்.
இவர்கள் ஆனமடுவ மஹாஉஸ்வல ரத்தனபால வித்தியாலயத்தின் கரப்பந்தாட்ட குழுவினராவார்கள். புத்தளம் பிரதேசத்தில் மிகவும் கஷ்டப்பட்ட பிரதேசத்தில் அமைந்திருக்கும் பாடசாலையாகும். நாளை என்பதே இவர்களுக்கு கேள்வியாகிப்போகின்ற பெருங் கஷ்டங்களை கொண்ட பிரதேசமாகும்.
மடிந்துகொண்டிருக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கு உயிரூட்டிய அப்பாடசாலையின் ஆசிரியர் அனில் சந்திரகுமார கரப்பாந்தாட்ட குழுவினைக் கொண்டு, அனைத்து பாடசாலை மட்ட போட்டிகளிலும் வெற்றியை பெற்றுகொடுத்தார். தம்மை விட வசதி வாய்ப்புகளில் வளர்ந்திருந்த பாடசாலைகளை இறுதி போட்டிகளில் ஆட்டம் காண வைத்தனர் இக்குழுவினர்.
குறிப்பாக இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தங்கக்கோப்பை இறுதி போட்டியில் தம்மை எதிர்த்தாடிய பலம் பொருந்திய அணியைத் திணறவைத்து இவர்கள் பெற்றுக் கொண்ட வெற்றியானது அனைவராலும் பரவலாக பேசப்பட்டது.
இதுபற்றி பயிற்றுவிப்பாளரான ஆசிரியர் அனில் சந்திரகுமார குறிப்பிடுகையில், “நாங்கள் திறந்த வெளியில் வெளிப்படுத்தும் திறமைகள் உள்ளக அரங்கை விட அபாரமானதாகும். அதற்கு காரணம் எங்கள் குழந்தைகளுக்கு உள்ளக அரங்க அனுபவம் கிடையாது. குறிப்பாக உள்ளக அரங்கில் பயன்படுத்தப்படும் கரப்பந்தாட்ட பந்து விலைகூடியதாகும். அதேபோன்று திறந்த வெளி அரங்கை விட உள்ளக அரங்கில் தொழில்நுட்ப ரீதியான அழுத்தம் குறைவாகும். இதுபோன்ற காரணங்களால் எங்கள் குழந்தைகளுக்கு தங்களது சரியான திறமைைய வெளிப்படுத்த முடியாமல் உள்ளது. நாங்கள் இந்த போட்டியில 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உள்ளக அரங்கிற்கு மணித்தியாலத்திற்கு 2,000 ரூபாய் செலுத்தி, பயிற்சி செய்த பின்னரே கலந்துகொண்டோம். எங்கள் பாடசாலையிலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ளக அரங்கம் ஒன்று நிர்மாணிக்கப்படவிருந்தாலும் அது இன்றுவரை கனவாகவே உள்ளது. எனவே, நான் தாழ்மையாக கேட்டுகொள்வது என்னவென்றால், இந்த குழந்தைகளின் கனவுகள் மெய்பட வேண்டுமெனில் வளமுடைய எவரேனும் அல்லது நிறுவனமேனும் முன்வந்து இந்தக் கடமையை செய்துதர வேண்டும் என்பதாகும்” .
அணியின் தலைவி ப்ரிதிகா ப்ரோமதினி கருத்துரைக்ைகயில் “வறுமை எங்களிடம் இருந்து எல்லாவற்றையும் இல்லாது செய்துள்ளது. எனது அம்மா வெளிநாட்டில் தொழில் புரிகிறார். அப்பா விவசாயி. எனது அணியைச் சேர்ந்த பெரும்பாலானவர்களது பெற்றோர்கள் தற்போது உயிரோடு இல்லை. ஆனால் எங்கள் ஆசிரியர் எங்களுக்கு பெற்றோர்கள் போலாவார். எங்களுக்கு விளையாட்டில் போலவே வாழ்க்கையிலும் வெற்றிக்கொள்ள எமது ஆசிரியர் உறுதுணையாக இருக்கின்றார். நாங்கள் ஒருநாளும் வசதிகள் இல்லையென்று கவலைப்பட்டதில்லை. பின்னடையப்போவதும் இல்லை. எங்களது ஒரே நோக்கம் வெற்றியாகும். ஒரு நாள் பயிற்சி முடிந்து எனது அணியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் அவரது அம்மாவுடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது காட்டு யானை அவரது அம்மாவை தாக்கியதால் அம்மா மிகவும் பாதிக்கப்பட்டார். இருப்பினும் இந்த எல்லா தடைகளுக்கு மத்தியிலும் எமது இலக்கான வெற்றியை அடைவதற்கு எமது ஆசிரியரும் அதிபரும் எமக்கு பலமாக இருந்தார்கள்” என்றார்.
அறுந்த செருப்புகள் அணிந்து, தகிக்கும் மண்ணில் கால் பதித்து, உயர்ந்து எழும் அவர்களது எதிர்ப்பார்ப்புகளை நாளை நிறைவேற்றி கொள்வதற்காக டயலொக் நிறுவனம் தமது மனிதாபிமான நடவடிக்கை ஊடாக உள்ளக அரங்க போட்டியில் பயன்படுத்தும் பாதணிகள் உட்பட அந்த மாணவிகளுக்கு தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போசனை மிக்க உணவுகள் என்பனவற்றை அருணாலோகய நிறுவனத்துடன் இணைந்து எடுத்துச் சென்றனர். அப்போது பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த யுவதிகள் தமக்கு கிடைத்த புதிய பாதணிகளை அணிந்து வலைக்கு மேலெழுந்து வானத்தை நோக்கி எழுந்த பந்தினை ஓங்கி அடித்த போது அனைவரது கண்ணிலும் ஆனந்த கண்ணீர் சிந்தியது.
ஜனாதிபதி தங்கக்கோப்பை இறுதி போட்டியைப் பார்வையிட்டு கொண்டிருந்த டயலொக் நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவரின் மனதில் எழுந்த இந்த எண்ணத்தினை செயற்படுத்துவதற்கு முன்வந்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை, ஆணைமடு மஹாஉஸ்வெல ரத்தனபால வித்தியாலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டமையானது சிறப்புவாய்ந்த ஒன்றாகும்.
டயலொக் நிறுவனத்தின் உறுப்பினர்களால் நடத்தப்படும் இந்த உபகாரமானது, அப்பாடசாலையின் கரப்பந்தாட்ட அணியைத் திடப்படுத்தும் முயற்சி மட்டுமல்ல, அவர்களுக்கு புதியதொரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. பல கட்டங்களை கடந்து வந்த அவர்களை பாராட்டுவதோடு அவர்கள் மூலமாக சமூகத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதும் டயலொக் மனிதாபிமான நடவடிக்கையின் நோக்கமாக அமைகிறது. இந்த உபகாரத்தின் ஊடாக தற்போதைய அணியினருக்கும் இவர்களை பின்தொடரும் அணியினருக்கும் ஊக்கத்தை அளிக்கும் நிறுவனம் என்ற வகையில் டயலொக் மனிதாபிமான சேவையில் காணப்படும் சிறப்பம்சமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
48 minute ago
57 minute ago
1 hours ago