Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் பாடசாலைகள் ரக்பி நொக்கவுட் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இப்போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியனான இசிபத்தான கல்லூரி நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை பெற்றுள்ளது.
ஒகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பமாகிய முதல் போட்டியில் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியும் சாஹிரா கல்லூரியும் மோதின. இப்போட்டி கொழும்பு ஹெவ்லொக் பார்க்கில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் புனித பேதுரு கல்லூரி முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதன் மூலம் நிறைவுற்ற டயலொக் பாடசாலைகளுக்கான ரக்பி லீக் முதல் சுற்றில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாதிருந்த அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
இதேவேளை, இசிபத்தான கல்லூரி றோயல் கல்லூரியிடம் (22-17) என்ற கணக்கிலும், புனித பேதுரு கல்லூரியிடம் (28 -17) என்ற கணக்கிலும் தோல்விகளை தழுவியதன் காரணமாக தமது லீக் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள தவறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அரையிறுதிப் போட்டிகள் செப்டெம்பர் மாதம் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளிலும், மாபெரும் இறுதிப் போட்டி செப்டம்பர் 10ஆம் திகதியன்றும் கொழும்பு ரோயல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் நடைபெறும்.
போட்டிகளுக்கான பிரதான அனுசரணை வழங்குகின்ற, டயலொக் ஆசி ஆட்டா இப்போட்டிகளை thepapare.com, Dialog VIU மொபைல் App மூலம் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகளை செய்திருந்தது. மேலும், தற்போதைய மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ரக்பி அபிமானிகள் ஆகியோரின் நலன் கருதி Dialog TV அலைவரிசை 126 இலும் இப்போட்டிகள் நேரலையாக காண்பிக்கப்பட்டது.
2022 டயலொக் பாடசாலைகள் நொக்கவுட் சம்பியன்ஷிப்பில், இசிபத்தான கல்லூரி புனித சூசையப்பர் கல்லூரியை (49-22) வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய, நொக்கவுட் போட்டிகளில் 11 வெற்றிகளுடன் இசிபத்தான கல்லூரி அதிக வெற்றிகளையும், புனித பேதுரு கல்லூரி ஏழு வெற்றிகளையும், புனித தோமஸ் கல்லூரி ஐந்து வெற்றிகளையும் பெற்றுள்ளன.
டயலொக் ஆசிஆட்டா தேசிய கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், இலங்கை திறந்த கொல்ஃப் மற்றும் பராலிம்பிக், இராணுவ பரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டுகள் உட்பட உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago