2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

ஜனவரி ‘Cash Bonanza’ வெற்றியாளருக்கு SLT-MOBITEL பரிசளிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITELஇன் ‘Cash Bonanza’ திட்டத்தின் ஜனவரி மாத வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த R.யஜிந்தனுக்கு SLT-MOBITEL ரூ.1,000,000 பெறுமதியான பணப்பரிசை அன்பளிப்புச் செய்தது.

இந்த அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு அண்மையில் மொபிடெல் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் SLT-MOBITELஇன்  பிரதம செயற்பாட்டு அதிகாரி, பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மற்றும் பிரதி பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் மில்லியனர்களை உருவாக்கியமைக்காக புகழ்பெற்றுள்ள SLT-MOBITELஇன் ‘Cash Bonanza’, இவ்வருடமும் அனைவரும் வெற்றியாளராக திகழ்வதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினூடாக அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு          ரூ. 3 மில்லியன் பெறுமதியான பணப்பரிசை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையும், மேலும் ரூ.1 மில்லியன் பெறுமதியான பணப்பரிசுத் தொகையை மாதாந்தம் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

நீங்களும் வெற்றியாளராக விரும்பினால் ரூ.100 எனும் சிறிய தொகையை ரீலோட் செய்வதன் மூலம், ரீலோட் மூலமான பிளான் செயற்படுத்தல் மூலம் அல்லது SLT Mobitel Mobile இணைப்பிற்கான பட்டியலை செலுத்துவதன் மூலம் Cash Bonanza திட்டத்தில் பங்கேற்க முடியும்.

SLT-MOBITEL முன்னெடுத்துள்ள இத்தேசிய மட்ட வெகுமதித் திட்டம், நாடெங்கும் உள்ள அதன் விசுவாசமிகு வாடிக்கையாளர்களிற்கு அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கவல்ல பணப்பரிசை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X