2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சொத்து விற்பனை பற்றிய தகவல்களுக்கு மறுப்பு

S.Sekar   / 2022 ஏப்ரல் 22 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா ரெலிகொம் (SLT) தனது சொத்துக்கள் விற்பனை செய்யப்படலாம் என அண்மையில் வெளியாகியிருந்த செய்திகள் மற்றும் அறிக்கைகளை SLT-MOBITEL நிர்வாகம் மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வெளியாகியிருந்த அறிக்கைகளில், SLT பணிப்பாளர் சபையிடமிருந்து மற்றும் நிறுவனத்தின் 49.5% பங்குகளை கைவசம் கொண்டுள்ள திறைசேரியின் செயலாளரிடமிருந்து, தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு முடிவை தாம் மேற்கொள்வது பற்றி பரிசீலிக்கவில்லை என்றும், நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகளை அப்படியே தொடர உறுதிபூண்டுள்ளதாகவும் SLT தனது பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதியளிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .