Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி அண்மையில் தனது 240ஆவது செலான் பஹசர நூலகத்தை கொட்டம்பபிட்டிய முஸ்லிம் மத்திய கல்லூரியில் திறந்து வைத்ததன் மூலம் இலங்கைச் சிறுவர்களிடையே வாசிப்பு மற்றும் கற்றல் கலாச்சாரத்தை வளர்ப்பதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளது. கற்றல் தேவை மற்றும் அபிலாஷைகளை வளர்க்கும் சூழலை உருவாக்கும் முகமாக வளங்கள் அதிகம் தேவைப்படும் பாடசாலைகளில் 2026ஆம் ஆண்டளவில் 300 செலான் பஹசர நூலகங்களை நிறுவும் வங்கியின் இலக்கை அடைவதில் இது சமீபத்திய படியாகும்.
கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக நடைமுறையிலுள்ள செலான் பஹசர முயற்சியில் கல்வி அமைச்சுடன் செலான் வங்கியின் பகுதி முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கல்விக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் உதவி தேவைப்படும் பாடசாலைகளைக் கண்டறிவதில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், கொட்டம்பபிட்டிய முஸ்லிம் மத்திய கல்லூரி உதவி தேவைப்படும் பாடசாலைகளில் ஒன்றாக இனங்காணப்பட்டு, செலான் பஹசர முயற்சி ஊடாக நூலகத்திற்கு பரந்த அளவிலான புத்தகங்களுடன் இரண்டு கணினிகள், பல்லூடகப் படவீழ்த்தி மற்றும் அகலத் திரை (wide screen) ஆகியவை உள்ளடங்கலாக அடிப்படை தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டது. மேலும் வங்கியானது தற்போதைய நூலக உட்கட்டமைப்பை மதிப்பீடு செய்து அதன் தளபாடங்கள், கூரை மற்றும் தரை ஆகியவற்றை மேம்படுத்தியது. இது மாணவர்களுக்கு அறிவை வளர்ப்பதற்கும், அறிவுத்திறனை கூர்மைப்படுத்துவதற்கும் ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்குகிறது.
செலான் வங்கியின் முதன்மையான நிலைத்தன்மை திட்டத்தின் சமீபத்திய மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த பிரதான நிதி அதிகாரி சம்பிக்கா தொடன்வெல, “பாரம்பரிய கல்விக் கட்டமைப்பிற்கு அப்பால் அவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கு தேவையான கருவிகள் மற்றும் சூழலை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் இலங்கைச் சிறார்களின் அபிலாஷைகளில் நாங்கள் முதலீடு செய்கிறோம். வாசிப்பு மற்றும் கற்றல் தேவையை வளர்ப்பது சிறுவர்களை அவர்களின் அதிகபட்ச இலக்கை அடைய தூண்டுவதற்கு மிகவும் முக்கியமானது. இது சமூகத்திலும் நாட்டின் எதிர்காலத்திலும் சாதகமான மாற்றங்களை கொண்டுவரும். செலான் பஹசர மூலம் நாங்கள் அடிமட்டத்தில் தொடங்கி, நாடு முழுவதும் உள்ள சிறுவர்களுக்கு அவர்களின் இலட்சியங்களை அடையத் தேவையான ஆதரவைப் பெறுவதில் சிறந்த அணுகல் இருப்பதை உறுதிசெய்கிறோம்." எனத் தெரிவித்தார்.
240ஆவது செலான் பஹசர நூலக திறப்பு விழாவில் பிரதேசக் கல்விப் பணிப்பாளர் ஜகத் சந்திரசிறி, செலானின் வடமேற்கு பிராந்தியத்தின் (II) பகுதி முகாமையாளர் உபேந்திர அடிகாரி மற்றும் ஹெட்டிபொல கிளை முகாமையாளர் விஜய் குமார் தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், பாடசாலை அதிபர் ஜே.எம்.மிஹிலர், நூலகர் திருமதி எம்.ஐ.ஷிஃப்னா, மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு வாசிப்பு மற்றும் கற்றலின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் அதேவேளை பாடசாலை வளாகத்தில் பல மரங்களை நடுவதன் மூலம் இயற்கை வளங்களை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.
கற்பவர்கள் உலகைப் பற்றிய விரிவான புரிதலை வளர்க்கக்கூடிய உள்வாங்கப்பட்ட இடங்களாக பௌதீக நூலகங்களின் முக்கியத்துவத்தை செலான் வங்கி தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது. இந்நம்பிக்கையை பேணும் அதேவேளை வங்கியானது செலான் பஹசர முன்முயற்சியின் மூலம் பாரம்பரிய நூலகங்களில் எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் டிஜிட்டல் இடங்களை உருவாக்க உதவுகின்றது. வசதிகளை டிஜிட்டல் மயமாக்குவதிலும் நவீன தொழில்நுட்பத்துடன் நூலகங்களை மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன் விருத்தியின் பொருட்டு கூட்டுக் கற்றலிற்கு வழிவகுப்பதிலும் சம கவனம் செலுத்தப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago