2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

செலான் வங்கிக்கு கௌரவம்

S.Sekar   / 2021 மார்ச் 29 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, அண்மையில் இடம்பெற்ற SLIM DIGIS 2020 வைபவத்தில் தனது பிரத்தியேக டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டமான “Deken Dunne”திட்டத்துக்கு வெள்ளி விருதை சுவீகரித்திருந்தது. Social Bakers© இனால் மார்ச்-ஜுன் மற்றும் ஆகஸ்ட்-டிசம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையில் அதிகளவு சமூக வலைத்தள பின்தொடர்கைகளையும், வேகமாக வளர்ந்து வரும் நிதித் துறைசார்ந்த பக்கம் என்பதற்கு கிடைத்த ஊக்குவிப்பாக அமைந்துள்ளது.

அன்புடன் அரவணைக்கும் வங்கி எப்போதும் வாடிக்கையாளர் சௌகரியம் தொடர்பில் எப்போதும் கவனம் செலுத்துவதுடன், நவீன கால வாடிக்கையாளர் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனது டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணத்தை முன்னெடுக்கின்றது. டிஜிட்டல் பகுதியிலுள்ள நிதியியல் வர்த்தக நாமம் எனும் வகையில், Facebook இல் மாத்திரம் 650,000 ரசிகர்களை செலான் வங்கி பெற்றுள்ளது. “The Financial Brand” இணையத்தளத்தினால் சமூக ஊடகத்தை சிறப்பாக பயன்படுத்தியிருந்தமைக்காக, உலகின் நிதி வர்த்தக நாமங்கள் தரப்படுத்தலில் 87 ஆம் இடத்திலும், இலங்கையில் 1ஆம் ஸ்தானத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற SLIM DIGIS விருதுகள் வழங்கும் வைபவம் 2020 இன் போது, செலான் “Travel the Island” இணையத்தளம் மற்றும் செலான் “Offers Rasiya” திட்டத்துக்கு இரு விசேட விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. சந்தைப்படுத்தலில் பின்பற்றப்படும் பாரம்பரிய விதிமுறைகளில் டிஜிட்டல் உள்ளடக்கங்களினூடாக, புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தமைக்காக SLIM DIGIS 2019 இல் செலான் வங்கிக்கு இரு தங்க விருதுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக புரட்சிகரமான “How to balance your Baba” பிரச்சாரத் திட்டத்துக்காக இந்த கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. சமூக வலைத்தளங்களினூடாக மாத்திரம் முழுமையாக பிரச்சாரம் செய்யப்பட்ட இந்தத் திட்டம், இலங்கையின் டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த ஆண்டில் தொற்றுப் பரவலுடன், பல்வேறு புத்தாக்கமான டிஜிட்டல் ஈடுபாட்டு சிந்தனைகளை வெவ்வேறு சந்தைப் பிரிவுகளுக்கு செலான் வங்கி அறிமுகம் செய்திருந்தது. நீண்ட காலம் தமது வீடுகளில் தங்கியுள்ள சிறுவர்களின் உளவியல் தொடர்பில் வைத்தியர். குமுது உடனான செலான் டிக்கிரி வீடியோ தொடர், சிறிய, நடுத்தரளவு வியாபாரங்களுக்கான வியாபார குறிப்புகள் அடங்கிய வீடியோத் தொடர் YouTube இல் முன்னெடுக்கப்பட்டமை, செலான் டிக்கிரி “Wadihitiyo saha Podihitiyo” டிஜிட்டல் ஊக்குவிப்புத் திட்டம், செலான் ஸ்மார்ட் வங்கியியல் 24/7 டிஜிட்டல் வங்கிச் சேவைத் திட்டம், "Suba Dasun"டிஜிட்டல் திட்டம் மற்றும் ‘Past memories of Roy-Tho for School Cricket’டிஜிட்டல் தொடர் போன்றன புத்தாக்கமான நுகர்வோரை ஈடுபடுத்தும் டிஜிட்டல் திட்டமாக அமைந்திருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .