2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்ப்பு

S.Sekar   / 2022 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்கள் சௌகரியமான தீர்வுகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் ஹேலீஸ் சோலருடன் செலான் வங்கி பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக, சூரிய மின்பிறக்கல் கட்டமைப்புகளை கொள்வனவு செய்வதற்காகா இலகு தவணை முறை மீளுச் செலுத்தும் வசதியை செலான் அட்டைதாரர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாகவும், அதிகரித்துச் செல்லும் மின்சார கட்டணங்களின் காரணமாகவும், சூரிய மின்சக்தி சிறந்த பொருத்தமான மாற்றுத் தீர்வாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், சூரியபடல்களைப் பொருத்துவதற்கான உயர்ந்த கட்டணங்கள் காரணமாக மக்கள் இந்த மாற்றுத் தீர்வை பயன்படுத்த முன்வருவதில்லை. ஹேலீஸ் சோலருடன் செலான் வங்கியின் பங்காண்மையினூடாக, பொது மக்களுக்கு சூரிய மின்வலுவுக்கு மாறிக் கொள்வது சகாயமான தெரிவாக்கப்பட்டுள்ளது.

செலான் அட்டைகளுக்கான இலகு தவணை முறை கொடுப்பனவில் 0% வட்டியில்லாத மீளச் செலுத்தல்கள் 3 மாதங்கள், 6, 12 மற்றும் 24 மாதங்கள் வரை ஆகக் குறைந்தது 10,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை வழங்கப்படுகின்றது.

இந்தப் பங்காண்மை தொடர்பில் செலான் வங்கியின் அட்டைகள் பிரிவின் தலைமை அதிகாரி ருச்சித் லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “அத்தியாவசிய தேவைகளுக்கான, அத்தியாவசிய அட்டையான செலான் கார்ட்ஸ், எமது வாடிக்கையாளர்களின் அத்தியாவசிய நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் எப்போதும் கவனம் செலுத்துகின்றது. அவர்களுக்கு எவ்வாறு சௌகரியமான தீர்வுகளை வழங்க முடியும் என்பது தொடர்பான வழிமுறைகளை தொடர்ச்சியாக இனங்காண முயற்சி செய்கின்றோம். விசேடமாக இந்த நெருக்கயான காலப்பகுதியில், செலான் கார்ட்ஸ் ஊடாக, பரந்தளவு தீர்வுகள் மற்றும் சேவைகள் வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையை தணிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன. மேலும், நிலைபேறாண்மை அடிப்படையில், இந்த நடவடிக்கையினூடாக பெருமளவான மக்களுக்கு புதுப்பிக்கத்தக்க வலுவுக்கு மாறிக் கொள்ளக்கூடியதாக இருக்கும், இதனூடாக காபன் வெளியீட்டைக் குறைக்க முடியும் என்பதுடன், மசகு எண்ணெய் இறக்குமதிக்கான செலவைக் குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், இந்த நிலைபேறான வலு மூலங்களை பல இலங்கையர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றியமைப்பது எமது கடமையாகும். அதனூடாக நீண்ட கால அடிப்படையில் வலுப் பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

செலான் வங்கி மற்றும் ஃபென்டன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க வலுப் பிரிவான ஹேலீஸ் சோலர் ஆகியவற்றுக்கிடையிலான பங்காண்மை என்பதனூடாக, இந்த இணைந்த செயற்பாட்டின் உறுதித்தன்மைக்கு வலுச் சேர்த்துள்ளன. புதுப்பிக்கத்தக்கவை மற்றும் வலு சேகரிப்பு கட்டமைப்புகள் போன்றவற்றில் ஹேலீஸ் சோலர் பிரதானமாக கவனம் செலுத்துகின்றது. ஒரு தசாப்த காலத்துக்கும் அதிகமான சந்தைச் சிறப்புடன் நிறுவனம் வெற்றிகரமாக 75MW சூரிய மின்பிறப்பாக்கல் கட்டமைப்புகளை நாடு முழுவதிலும் பொருத்தியுள்ளது. இதனூடாக இலங்கையில் பொறியியல், கொள்முதல் மற்றும் நிர்மாணம் (EPC) ஆகியவற்றில் ஒப்பற்ற முன்னோடியாக திகழ்கின்றது. ஹேலீஸ் சோலரினால் வழங்கப்படும் தீர்வான Energynet இனால் பரந்தளவு off-grid, hybrid மற்றும் battery backup கட்டமைப்புகள் வழங்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X