2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

செலான் வங்கி வரிக்குப் பின்னரான இலாபமாக 3 பில். ரூபாயைப் பதிவு

S.Sekar   / 2021 மார்ச் 19 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகுந்த சவால்கள் நிறைந்த சூழ்;நிலைகளின் பின்னணியிலும் செலான் வங்கியானது 2020  டிசம்பர் 31ஆம் திகதி முடிவடைந்த ஆண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக (PAT) ரூ. 3 பில்லியனை பதிவு செய்துள்ளது.

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் வங்கியின் வட்டி வருமானம் ரூ. 52.3 பில்லியனாக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்ட அதேநேரத்தில் வட்டிச் செலவுகள் 32.8 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது. இது, 4.6% வருடாந்த அதிகரிப்புடன் ரூ. 19.5 பில்லியனாக பதிவுசெய்யப்பட்ட வங்கியின் தேறிய வட்டி வருமானத்தை (NII) பிரதிபலிப்பதாக இது காணப்பட்டது. இவ்வருடத்தில் ரூ. 41.7 பில்லியன் வட்டி வருமானங்களை உழைத்துத் தந்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் தொடரானது தேறிய வட்டி வருமானத்திற்கு பிரதான பங்களிப்பை வழங்கியது. அதேவேளை, திறைசேரி நடவடிக்கைகள் ரூ. 8.5 பில்லியன் வட்டி வருமானத்தை பெற்றுத் தந்தது. வைப்புக்கள் மீதான வட்டிச் செலவுகள் ரூ. 27.8 பில்லியனாக காணப்பட்டது. இதன்மூலம் முன்னைய வருடத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ரூ. 30.7 பில்லியனில் வீழ்ச்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கி தனது நிதியிடல் செலவுகளைக் குறைப்பதற்கு, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் மீள்-விலையிடப்பட்ட வைப்புக்கள் உதவி புரிந்தன.

2019ஆம் நிதியாண்டில் 4.20% ஆக பதிவு செய்யப்பட்ட வங்கியின் தேறிய வட்டி எல்லை (NIM) 2020 இல் 3.95% ஆக குறைவடைந்துள்ளது. வைப்புக்களை விட விரைவான ஒரு வீதத்தில் கடனேடு மீள் விலையிடப்பட்டமையே இதற்குக் காரணமாகும். அத்துடன், குறைந்த கிரய வைப்புக்களில் இருந்து ஏற்பட்ட சாதகமான தாக்கத்தை ஈடுசெய்வதாகவும் இது அமைந்துள்ளது. தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் ரூ. 4.2 பில்லியனில் இருந்து ரூ. 3.7 பில்லியனாக குறைவடைந்து, ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையில் 11.89மூ வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.  வியாபாரங்கள் மற்றும் சில்லறை வணிகங்கள் போன்ற தரப்பினர் மேற்கொள்ளும் வெளிநாட்டுடன் தொடர்புடைய செயற்பாடுகள் மற்றும் வங்கியியல் தொழிற்பாடுகள் குறைவடைந்தமை இதற்கு பிரதான காரணமாக அமைந்தது.

வங்கியின் தொழிற்பாட்டு வருமானத்தில் ஏற்பட்ட 4.36% அதிகரிப்புக்கு திறைசேரி வணிக நடவடிக்கைகள் பிரதான உதவியாக அமைந்தன. 2019 இல் திறைசேரி வணிக நடவடிக்கைகளில் இருந்தான நட்டம் ரூ. 497 மில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இது 2020 நிதியாண்டில் ரூ. 348 மில்லியன் வருமானமாக முன்னற்றமடைந்துள்ளது. மேலும், நிதியியல் சொத்துக்களின் அங்கீகார நீக்கம் மூலம் கிடைக்கப் பெற்ற ஆதாயங்கள் 2019ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ. 320 மில்லியனில் இருந்து, இந்த நிதியாண்டில் ரூ. 782 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது, தொழிற்பாட்டு வருமான வளர்ச்சியை தக்கவைத்துள்ளது. அதேநேரம், ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது ரூ. 600 மில்லியனால் குறைவடைந்துள்ளது. இதற்குப் பிரதான காரணம், வெளிநாட்டு அந்நியச் செலாவணியுடன் தொடர்புபட்ட செயற்பாடுகள் ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .