Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2021 செப்டெம்பர் 24 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, முதன் முறையாக செலான்-Visa வியாபார வங்கியியல் டெபிட் அட்டையை, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. தமது பணக் கொடுக்கல் வாங்கல்களை POS ஆக மாற்றிக் கொள்வதற்கு உதவும் வகையில் அண்மையில் இந்த அறிமுகத்தை மேற்கொண்டது. இந்த பிரத்தியேகமான டெபிட் அட்டையினூடாக, பாரம்பரிய பண மற்றும் காசோலை கொடுப்பனவு தெரிவுகளுக்கு பதிலாக, சௌகரியம் மற்றும் பாதுகாப்பு ஆகியன வழங்கப்படும் என வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும், சிறிய நடுத்தரவு தொழில் முயற்சியாண்மைகளுக்கு தமது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் உதவிகளை வழங்குவதில் செலான் வங்கி எப்போதும் முன்னிலையில் திகழ்கின்றது. புதிய SME டெபிட் அட்டை என்பது, தற்போதைய சூழலில் SME வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டலை மேற்கொள்வதற்கு அவசியமான புதிய சாதனங்களை பெற்றுக் கொடுக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. குறித்த வியாபார வங்கியியல் டெபிட் அட்டையை சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் இலத்திரனியல் கட்டமைப்புகள், பிரத்தியேகமான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள், வியாபார மற்றும் பிரத்தியேகக் கொடுப்பனவுகள் போன்றவற்றில் கொடுப்பனவுகளை வேறுபடுத்தி மேற்கொள்வதற்கு சௌகரியமான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தப் பிரிவில் பாரம்பரிய பண மற்றும் காசோலை கொடுப்பனவு தெரிவுகளுக்கு பதிலாக, செலான் வங்கியினால் முதன் முறையாக SME டெபிட் அட்டை வழங்கப்படுகின்றது. வியாபாரங்களுக்கு சௌகரியமாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கும், பணத்தைக் கொண்டு செல்வதற்கு பதிலாக சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்கும், POS கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும், கொடுப்பனவுகளை இலகுவான முறையில் கணக்கு இணக்கம் (reconciliation) செய்து கொள்வதற்கும் இது உதவியாக அமைந்திருக்கும். வாடிக்கையாளரின் தொடர்ச்சியான நலனில் செலான் வங்கி முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் அட்டைதாரர்களுக்கு தமது அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கு பிரத்தியேகமான விழிப்புணர்வூட்டும் பயிற்சிப்பட்டறைகளையும் முன்னெடுக்கும்.
இலங்கையில் காணப்படும் பதிவு செய்யப்பட்ட வியாபாரங்களில் 90% அதிகமானவை நுண், சிறிய நடுத்தரளவு வியாபார முயற்சிகளாக அமைந்துள்ளன. தொற்றுப் பரவல் காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. செலான் வங்கி, இந்தத் துறைக்கு சாதாரண நிதிச் சேவைகளை வழங்குநர் என்பதற்கு அப்பால் சென்று, டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வுகள், வியாபார சேவைகள், பண முகாமைத்துவ சேவைகள், விற்பனை ஏடு முகாமைத்துவம் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளான நிதியியல் மற்றும் வங்கியியல் ஆலோசனைகளை வழங்கல், தொழில்நுடப் நிபுணத்துவத்தை வழங்கல், வியாபார கருத்தரங்குகளையும் பயிற்சிப்பட்டறைகளையும் முன்னெடுத்தல் போன்ற பலவற்றையும் முன்னெடுக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago