Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
S.Sekar / 2022 மார்ச் 14 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி டிசம்பர் 31 முடிவடைந்த ஆண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக (PAT) ரூ. 4.6 பில்லியனை பதிவு செய்துள்ளது, 2020 இல் 4.64% ஆக பதிவு செய்யப்பட்ட வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப் பகுதியில் குறிப்பிடத்தக்களவுக்கு 20.98% வளர்ச்சியடைந்ததன் விளைவாகவே வரிக்குப் பின்னரான இலாபம் உயர்வடைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நிலவிய மிகவும் சவால்மிக்கதான செயற்பாட்டுச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் வரிக்கு முன்னரான இலாபம் (PBT) கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 46.62% என்ற ஆரோக்கியமானதொரு அதிகரிப்புடன் ரூ. 6.0 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது. இதன் பெறுமதி 2020 இல் ரூபா 4.1 பில்லியனாக காணப்பட்டது. அதேபோன்று வங்கியின் வரிக்குப் பின்னரான இலாபமும் (PAT) கடந்த நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ. 3.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 52.11% அதிகரிப்புடன் ரூ. 4.6 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது.
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் வங்கியின் ஒட்டுமொத்த வட்டி வருமானம் ரூ. 4.3 பில்லியனால்; குறைவடைந்து 2021 இல் ரூபா 46.8 பில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், இந்த நிதியாண்டுக்கான வட்டிச் செலவுகள் அதைவிட அதிகமான சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதாவது, 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வட்டிச் செலவுகள் 26.66% வீழ்ச்சியடைந்து, ரூ. 23.2 பில்லியனாக பதிவு செய்யப்பட்டதுடன், 2020 நிதியாண்டில் ரூ. 31.6 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது.
அதன் பெறுபேறாக, 2020 இல் 4.64% வளர்ச்சியை பதிவு செய்திருந்த வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப் பகுதியில் குறிப்பிடத்தக்களவுக்கு 20.98% வளர்ச்சியடைந்தது.
வங்கியின் தேறிய வட்டி எல்லையில் 2021 ஆம் ஆண்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி 2020 ஆம் ஆண்டில் பதிவாகிய 3.63% தேறிய வட்டி எல்லையுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டு இது 4.05% ஆக முன்னேறியுள்ளது. வங்கியின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை உரிய நேரத்தில் மீள்விலையிடல் செய்தமையும் அதேபோன்று வங்கி தனது CASA (நடைமுறைக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு) தளத்தை தொடர்ச்சியாக பலப்படுத்தி வந்தமையும் இதற்குக் காரணமாக அமைந்தது. அந்த வகையில் CASA தளத்தின் பெறுமதி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ரூ. 27.6 பில்லியனால் 19.00% அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்கியின் தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் கடந்த நிதியாண்டின் ரூ. 3.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2021 இல் ரூ. 4.6 பில்லியனாக 24.44% அதிகரித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றை பதிவு செய்துள்ளது. உத்தரவாதங்கள், வழங்கல் கட்டணங்கள், வணிகம்சார் கட்டணங்கள் அதேபோன்று கடன்கள் மற்றும் அட்டைகள் மீதான கட்டண வருமானம் ஆகியவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பே தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் அதிகரிப்பதற்கு பிரதானமாக வழிவகுத்தது.
2021 இல் வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 31.4 பில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் பெற்றுக் கொண்ட ரூ. 25.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 23.71% அதிகரிப்பாக காணப்படுகின்றது.
வங்கியின் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்தான தேறிய வருவாய் 163.02% இனால் குறைவடைந்ததுடன், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப் பகுதியில் 'முதல்நிலை நிதி ஆவணங்கள்' மற்றும் அரச பிணையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விலைச் சீராக்க நட்டங்கள் இதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப் பகுதியில் நிதிச் சொத்துக்கள் மீதான தேறிய 'அங்கீகார நீக்க வருவாய்கள்' 29.28% பாதகமானதொரு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வங்கியின் ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது 2021 இல் ரூ. 2,877.6 மில்லியனாக பதிவு செய்யப்பட்டது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 172.04% அதிகரிப்பாக காணப்படுகின்றது.
2020ஆம் ஆண்டு ரூ. 12.8 பில்லியனாக காணப்பட்ட வங்கியின் ஒட்டுமொத்த தொழிற்பாட்டுச் செலவானது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப் பகுதியி;ல் ரூ. 13.1 பில்லியனாக 2.15% இனால் அதிகரித்துள்ளது. வங்கியின் ஆளணிச் செலவுகள் முன்னைய வருடத்தின் ரூ. 7.2 பில்லியனில் இருந்து 2021 இல் ரூ. 7.3 பில்லியனாக சிறிதளவில் 0.15% இனால் அதிகரித்துள்ளது. ஆளணிச் செலவுகளில் குறித்துரைக்கப்பட்ட அனுகூல பொறுப்புக்கள் மீது எதிரீடு செய்யப்பட்ட ரூ. 437.0 மில்லியன் முன்-சேவைச் செலவுகளும் (Past service cost) உள்ளடங்குகின்றன. இத் தொகை நீக்கப்பட்டால், ஆளணிசார் செலவுகள் கடந்த வருடத்தை விடவும் 6.19% அதிகரிப்பை வெளிக்காட்டும். கூட்டு உடன்படிக்கைகளால் ஏற்பட்ட வருடாந்த சம்பள அதிகரிப்புக்கள் மற்றும் ஊழியர் பதியுயர்வுகளால் உருவான அதிகரித்த சம்பள அளவுத் திட்டங்கள் ஆகிவையே இதற்கு பிரதான காரணமாக அமைந்தது.
நிறுவனச் செலவுகளில் ஏற்பட்ட மிதமானதொரு அதிகரிப்பு பாராட்டத்தக்கதாகும். இவ் வருட காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் விரைவான அளவுசார் வளர்ச்சியை இது தந்துள்ளது. பணிப்பாய்வு கட்டமைப்பை நடைமுறைப்படுத்தல், ரோபோ செயன்முறை தன்னியக்கமாக்கல், வியாபாரச் செயன்முறைகளை மீளமைத்தல் மற்றும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் தளமேடைகளுக்கு நகர்த்துதல் போன்ற செயற்றிறன் மேம்படுத்தல் முன்னெடுப்புக்கள் மற்றும் செயன்முறைசார் மேம்படுத்தல்கள் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக இது காணப்படுகின்றது. 2020ஆம் ஆண்டு ரூ. 5.5 பில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்த நிறுவனச் செலவுகள் இதன் பலனாக, 2021 இல் ரூ. 5.8 பில்லியனாக அதிகரித்துள்ளது. எவ்வாறிருப்பினும், வங்கியானது செலவைக் குறைப்பதிலும் செயன்முறைகளை நெறிப்படுத்துவதிலும் தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.
2021 இல் மதிப்பிறக்க கட்டணங்கள் (Impairment charges) ரூ. 10.4 பில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020 இல் பதிவு செய்யப்பட்ட ரூ. 7.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 49.03% அதிகரிப்பாகும். நிதிக் கூற்றுக்களில் மதிப்பிறக்கக் கட்டணங்களுக்காக போதுமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை வங்கி உறுதிப்படுத்துகின்ற அதேநேரத்தில், வங்கியின் கடன் தொடர் மீதான கடன் தரத்தை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்வதிலும் வங்கி தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது.
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியாண்டில், தனிப்பட்ட முறையில் குறிப்பிடத்தக்க கடன்கள் விமர்சன ரீதியாக மதிப்பிடப்பட்டு, பொருத்தமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுள் சில வாடிக்கையாளர்கள் கடன்சலுகைக் காலத்தினை அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும் கூட வங்கி இதனை மேற்கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago