Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
S.Sekar / 2022 நவம்பர் 07 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் டிக்கிரி, தேசத்தின் சிறுவர்களுக்கு களிப்பூட்டும், புத்தாக்கமான அம்சங்கள் நிறைந்த மாதமாக கொண்டாடியது. இதற்காக பல சலுகைகளையும் வழங்கியிருந்தது. தொடர்ச்சியாக 10ஆவது வருடமாக செலான் டிக்கிரி உலக சிறுவர் மாதத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஏற்கனவே காணப்படும் மற்றும் புதிய சிறுவர் சேமிப்புக் கணக்குகளில் 2022 ஒக்டோபர் 1 முதல் 31 வரையான காலப்பகுதியினுள் மேற்கொள்ளப்படும் வைப்புகளுக்கு விசேட வைப்புகளை வழங்கியிருந்தது.
பணவீக்கத்தின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு, அதிகரித்துச் செலவும் வாழ்க்கைச் செலவை குறைத்துக் கொள்வதற்காக பல இல்லங்களில், வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்வதை செலான் வங்கி இனங்கண்டிருந்தது. இந்தக் காரணிகளை கவனத்தில் கொண்டு, இந்த மாதத்தில் செலான் டிக்கிரியினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளினூடாக, சிறுவர்களின் பயிர்ச் செய்கை தொடர்பான புதிய சிந்தனைகளை வெளிக் கொண்டுவருவதை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது.
இந்த நற்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், புதிய அல்லது ஏற்கனவே காணப்படும் செலான் டிக்கிரி கணக்கினுள் ரூ. 25000/- வைப்புச் செய்யப்படும் போது, கணக்குதாரருக்கு, வீட்டுத் தோட்டச் செய்கைக்கான பொதி ஒன்று வழங்கப்பட்டது. இதில் இரு அத்தியாவசிய சாதனங்கள், கையுறைகள், வளர்ப்பு பொதிகள் மற்றும் விதைகள் போன்றவற்றுடன், டிக்கிரி வீட்டுத் தோட்ட போட்டியில் இலவசமாக பங்குபற்றும் வாய்ப்பு போன்றன அடங்கியிருந்தது. 12 வயது வரையான சிறுவர்களுக்கு இந்தத் திட்டத்தினூடாக ரூ. 500,000/- வரை பரிசுகளை வெற்றியீட்டக்கூடியதாக இருந்தது.
புதிய கணக்கொன்றில் ரூ. 100,000/- வைப்புச் செய்யப்படும் போது, மேற்படி வீட்டுத் தோட்டச் செய்கைப் பொதியைப் பெறுவதற்கும், அன்பளிப்பு வவுச்சர்கள் மற்றும் மேலதிக அன்பளிப்பு போன்றவற்றை பெறும் வாய்ப்பை கணக்குதாரர்கள் பெற்றுக் கொண்டனர். அதேவேளை, ஏற்கனவே காணப்படும் அல்லது புதிய கணக்கில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு புதிய ரூ. 5,000/- வைப்புக்கும், கணக்குதாரருக்கு, டிக்கிரி வீட்டுத் தோட்டச் செய்கைப் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாத்திரம் வழங்கப்பட்டது. மேலதிகமாக, செலான் டிக்கிரி, புகழ்பெற்ற வர்த்தக நாமங்களான அட்லஸ், CIB, Bata மற்றும் லுமாலா ஆகியவற்றுடன் இணைந்து கணக்குதாரர்களுக்கு விலைக்கழிவு கூப்பன்களையும் வழங்கியிருந்தது.
செலான் டிக்கிரியினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் செலான் வங்கியின் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “உலக சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு நாளை மாத்திரம் ஏனையவர்கள் அர்ப்பணித்திருக்கும் நிலையில், செலான் வங்கியைச் சேர்ந்த நாம், முழு மாதத்தையும், அடுத்த தலைமுறைக்காக ஒதுக்கி, கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கொண்டாடி வருகின்றோம். இந்த ஆண்டில், வீட்டுத் தோட்டச் செய்கையில் சிறுவர்களை ஈடுபடுத்த ஊக்குவிக்க நாம் தீர்மானித்தோம். எந்தவொரு சூழ்நிலையிலும் சிறந்ததை எய்துவதற்கு அவர்களுக்கு பயிற்றுவிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன் தமது பெற்றோருடன் பிணைப்பை ஏற்படுத்தும் அனுபவமாகவும் அமைந்திருக்கும். எமது வருடாந்த முயற்சிகளினூடாக இதனை நாம் சிந்திப்பதுடன், அடுத்த தலைமுறையினருக்காக சிறந்த உலகை உருவாக்குவதை அனைவரும் சிந்திக்க செலான் வங்கி நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.” என்றார்.
கடந்த 30 வருடங்களாக பொறுப்பு வாய்ந்த வர்த்தக நாமம் எனும் வகையில், செலான் டிக்கிரியினால் சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. காலப்பகுதிக்கு பொருத்தமான திட்டங்களை அறிமுகம் செய்து, ஈடுபாட்டு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வர்த்தக நாமம் சிறுவர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணி வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
2 hours ago
2 hours ago