2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

செலான் கடனட்டைகளுடன் ஆசிரி வைத்தியசாலை கட்டணங்கள் செலுத்தும் வசதி

S.Sekar   / 2022 செப்டெம்பர் 02 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட இலகு தவணை கொடுப்பனவு (EPP) திட்டத்தினூடாக ஆசிரி வைத்தியசாலை குழுமத்தின் வைத்தியசாலைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்வதை இலகுவாக்கும் வகையில் ஆசிரி வைத்தியசாலை குழுமத்துடன் செலான் வங்கி கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. அன்புக்குரியவர் சுகயீனமடைவதால் ஏற்படும் அழுத்தத்தை புரிந்து கொண்ட அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு வைத்தியசாலை கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது நிவாரணத்தை வழங்குவதற்காக முன்வந்துள்ளது. இதனூடாக அவர்களுக்கு இந்த நெருக்கடியான காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக அத்தியாவசிய அட்டையினூடாக மனநிம்மதியை பெற்றுக் கொள்ள முடியும்.

எந்தவொரு ஆசிரி வைத்தியசாலையிலும் செலான் கடனட்டையை பயன்படுத்தி கொடுப்பனவை மேற்கொள்ளும் செலான் கடனட்டை வாடிக்கையாாளர்களுக்கு விசேட இலகு தவணை கொடுப்பனவு (EPP) திட்டத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். 6 மாத காலப்பகுதிக்கு 0% வட்டியில்லாத முறையில் மீளச் செலுத்தும் வசதி வழங்கப்படும். வட்டியில்லாத இந்த இலகுமுறை மீளச் செலுத்தல் வசதியினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது செலவை படிப்படியாக செலுத்தக்கூடியதாக இருக்கும். இந்த வசதி 2022 டிசம்பர் 31ஆம் திகதி வழங்கப்படும். இந்த வசதியினூடாக, செலான் வங்கியினால் அட்டைதாரர்களுக்கு தமது அன்புக்குரியவர்களின் நெருக்கடியான காலப்பகுதியில் மேற்கொள்ளும் மொத்தக் கொடுப்பனவுகளின் போது தொடர்ச்சியான நிவாரணம் வழங்கப்படும்.

இலங்கையில் காணப்படும் முன்னணி சுகாதார பராமரிப்பு சேவை வழங்குநராக ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் திகழ்கின்றது. அர்ப்பணிப்பான, திறன் படைத்த மற்றும் அனுபவம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு அணியினரை தன்வசம் கொண்டுள்ளது. தொழிற்துறையில் காணப்படும் பல நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்களை பின்பற்றி, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான நோயாளர் பராமரிப்பு சேவையை வழங்குகின்றது. தரம் மற்றும் நோயாளர் பராமரிப்பு போன்றவற்றுக்கான வைத்தியசாலையின் அர்ப்பணிப்பை உறுதி செய்து, Joint Commission International இன் Gold Seal அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரி சேர்ஜிகல் ஹொஸ்பிட்டல், ஆசிரி மெடிகல் ஹொஸ்பிட்டல், ஆசிரி ஹொஸ்பிட்டல் காலி மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் மாத்தறை ஆகியவற்றுக்கு Australian Health Care Accreditation (ACHS) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பங்காண்மை தொடர்பில் செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது அட்டைதாரர்களுக்கு இந்த கொடுப்பனவு திட்டத்தை பெற்றுக் கொடுப்பதற்காக முன்னணி சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் ஆசிரி குழும வைத்தியசாலையுடன் நாம் கைகோர்த்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். தற்போதைய சூழலில், சுகாதார பராமரிப்பு துறையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் செலவுகளை தாங்கிக் கொள்வதில் பெரும் சிக்கல்களுக்கு பொது மக்கள் முகங்கொடுத்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கான அத்தியாவசிய அட்டை எனும் வகையில், இது போன்ற தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மைகளினூடாக வாடிக்கையாளர்களின் சுமையை குறைப்பதற்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

செலான் அட்டைதாரர்களுக்கு வருடம் முழுவதிலும் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளினூடாக தொடர்ச்சியாக பயன் பெறுவதுடன், தினசரி கொள்வனவுகளின் போது நிதிசார் நிவாரணத்தையும் அனுபவித்து வருகின்றனர். அதன் பிரகாரம், ஆகக் குறைந்த கையாளல் கட்டணத்தைச் செலுத்துவதனூடாாதக, எந்தவொரு கொடுக்கல் வாங்கலையும் இலகு முறையில் தவணைகளில் மீளச் செலுத்தும் வசதிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை செலான் அட்டைதாரர்கள் கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X