Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 மார்ச் 23 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல வர்த்தக நாமமான, "சூர்யா" வை உற்பத்தி செய்யும் சன் மட்ச் நிறுவனம் கடந்த 40 வருடங்களாக மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளதோடு தற்போது தனது வர்த்தகநாமத்தூதுவராக இலங்கையின் பிரபல நடிகை யசோதா விமலதர்மாவை நியமித்துள்ளது.
இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையானது இவ்வர்த்தகநாமத்தின் பிரசனத்தை விரிவாக்குவதும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுமாகும். சினிமா துறையில் யசோதாவுக்கு இருக்கும் பெயரும், புகழும், நல்லெண்ணமும் இதனை ஊக்குவிக்க உதவுவதுடன், வர்த்தகநாமத்தை வளர்த்தெடுக்கவும் வாடிக்கையாளருடனான உறவை வலுப்படுத்தவும் 40 ஆண்டுகளாக நிறுவனம் கட்டியெழுப்பிய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் மீள நிறுவவும் உதவும்.
சந்தையில் மரத்தாலான தீக்குச்சிகள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தொழில் முனைவாளர் டி.ஆர்.ராஜனால் மெழுகினாலான தீக்குச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது தமது முற்று முழுதான தானியங்கும் விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பின் மூலம் சந்தையில் முன்னணி வர்த்தகநாமமாகவுள்ளது. இந்த வர்த்தகநாமமானது 14 தனித்துவமான வாசனைகளைக்கொண்ட ஊதுபத்தி வரிசையை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்வதில் நாம் அக்கறையோடு இருக்கும் அதேவேளை எமது மெழுகு சிந்தாத மெழுகுவர்த்திகள் பல சாதனைகளைச் செய்யும். “யசோதா பாரம்பரிய மற்றும் தற்கால அழகின் கலவையாக விளங்குகிறார். இது எங்கள் வர்த்தகநாமத்தை பிரதிநிதித்துவப்படுத்த பொருத்தமானதாக இருக்கும்”என்று நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறுவுனரின் மகளுமான கெளரி ராஜன் தெரிவித்தார்.
விருது வென்ற திரைப்பட நடிகையான யசோதா, களணி பல்கலைக்கழகத்தின் ஹிந்திப்பாட பட்டதாரியும், லக்னோ பல்கலைக்கழகத்தில் இருந்து முதுமாணி பட்டம் பெற்றவருமாவார். கடந்த வாரம் இந்தயாவில் நடைபெற்ற ஆசிய பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்குபற்றி விட்டு திரும்பிய யசோதா தனது புதிய பங்குடமை பற்றிப் பேசினார்.
“சூர்யா பத்திகள் எனது வாழ்வுடன் ஆழமாக பின்னிப்பிணைந்திருக்கிறது. நம்பிக்கை, பெறுமதி என்பனவற்றை எனது வாழ்வுக்கு வழங்கியிருக்கிறது. சூர்யா வர்த்தகநாமத்துடன் கைகோர்த்திருப்பது மகிழ்ச்சி தருகின்றது. நான் எப்போதும் என் ஆன்மாவுக்கும் உளநம்பிக்கைகளுக்கும் உண்மையாக இருக்கவேண்டும் என்று விரும்புவேன். எனது கோட்பாடுகளை ஒத்திருக்கும் வர்த்தக நாமத்துடன் இணைவதில் மகிழ்ச்சி; அதனை ஊக்குவிக்க பாடுபடுவேன் என்றார்.”
யசோதாவுக்கும் சன் மட்ச் கம்பெனியின் நிறைவேற்று தலைவருமான சூரி ராஜனுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. இது பிரபல வர்த்தக நாமத்துக்கும் பிரபல நடிகைக்கும் இடையிலான பங்குடமையின் ஆரம்பத்தை குறிக்கிறது. நிறுவனத்துக்கு ஒரு மைல் கல் நடவடிக்கையாகும்.
விளம்பரங்கள் உள்ளடங்கலாக சூர்யாவின் பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் யசோதா இணைந்து இருப்பார். யசோதாவுக்கு இலங்கை மக்களிடையே உள்ள பெரும் வரவேற்பு சூர்யாவுக்கு ஒரு சாதகத்தன்மையை ஏற்படுத்தும். இந்த பங்குடமையானது இருதரப்புக்கும் சந்தையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் அத்துடன் அதன் பயணத்தையும் சிறப்பானதாக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago
2 hours ago